உலக வங்கித் தலைவர் பதவியை மறுத்தேன்: இவாங்கா டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு அளிக்க முன்வந்த உலக வங்கித் தலைவர் பதவியை மறுத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், வெள்ளை மாளிகை முதுநிலை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்
உலக வங்கித் தலைவர் பதவியை மறுத்தேன்: இவாங்கா டிரம்ப்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு அளிக்க முன்வந்த உலக வங்கித் தலைவர் பதவியை மறுத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், வெள்ளை மாளிகை முதுநிலை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இதுகுறித்து ஐவரி கோஸ்ட் தலைநகர் அபீஜானில் கூறியதாவது:
உலக வங்கித் தலைவர் பதவி காலியாக இருந்தபோது, அந்தப் பதவியை ஏற்பதற்கு விருப்பம் உள்ளதா? என்று என்னிடம் எனது தந்தை டொனால்ட் டிரம்ப் கேட்டார்.
எனினும், இப்போது வகிக்கும் வெள்ளை மாளிகை முதுநிலை ஆலோசகர் பதவியே முழு திருப்தி அளிப்பதாகவும், வேறு பதவி தேவையில்லை எனவும் நான் மறுத்துவிட்டேன் என்று கூறினார்.
முன்னதாக, உலக வங்கித் தலைவர் பதவிக்கு இவாங்கா டிரம்ப் மிகவும் பொருத்தமானவர் என்றும், அவர் கணிதத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவர் என்றும் டிரம்ப் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது உலக வங்கித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டேவிட் மால்பாஸைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவில் இவாங்கா டிரம்ப் இடம் பெற்றிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com