உலகில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று:  ட்ரம்ப் 

உலகில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார்.
உலகில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று:  ட்ரம்ப் 

நியூயார்க் : உலகில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார்.

குடியரசுக் கட்சி  உறுப்பினர்களின் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழனன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'உலகிலேயே அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத இறக்குமதி வரி விதித்து பின்னர் அதனை நமது முயற்சிகளின் விளைவாக 50 சதவீதமாக குறைத்தது,  அதை மேலும் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவின் வரி விதிப்பு முறையை விமர்சிக்கும் விதமாக 'இந்தியா வரிவிதிப்பின் ராஜா ' என்ற வார்த்தையை  அவர் பயன்படுத்தினார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினாய் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதிக்கிறது என்பதை சுட்டிக் காட்டி இந்தியாவை " வரிவிதிப்பு ராஜா" என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com