வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானது: 6 பேர் மாயம்

DIN | Published: 06th December 2018 12:09 PM


வாஷிங்டன்: தெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஜப்பான் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வழக்கமான பயற்சிக்காக 2 பேருடன் சென்ற எப்-18 ஃபைட்டர், 5 பேருடன் சென்ற கேசி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விமானங்களும், தெற்கு ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டபோது ஜப்பான் கடற்கரையின் மியோட்டோவில் இருந்து சுமார் 200 மைல் (322 கி.மீ) தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு விபத்துக்குள்ளானது. 

இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்த தகவல் இதுவரை வெளியாக வில்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவத்துள்ளதுடன், விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

Tags : Japan Six US Marines missing US military aircraft aircraft crashes F/A-18 Hornet fighter jet KC-130 refuelling tanker

More from the section

வங்கதேசத்தில் இரசாயன குடோனில் பயங்கர தீவிபத்து: 69 பேர் பலி
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
தண்டனைக்கு தடை கோரி நவாஸ் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
திபெத் புரட்சி தினம்: வெளிநாட்டினர் வருகைக்குத் தடை