வெள்ளிமணி

12 ராசிக்கான வாரப்பலன்கள்!

29th Sep 2023 12:15 PM

ADVERTISEMENT

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 29 - அக்டோபர் 5 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அமைதியாகச் செயல்பட்டு பலன்களைப் பெறுவீர்கள். செல்வாக்கை அதிகரிக்க முயற்சிப்பீர்கள்.  யோசித்து பேசுவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளுடன் ஒற்றுமையான சூழல் நிலவும். விவசாயிகளுக்கு வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் வீண்விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மனக்கவலையிலிருந்து விடுபடுவீர்கள்.  தொழிலை சீராக நடத்துவீர்கள். உறவினர்களால் நற்பலன்கள் கிடைக்கும். சிறிது மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டு பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவசாயிகள் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். கலைத்துறையினருக்கு  பொருளாதார அபிவிருத்தி கிடைக்கும்.  

பெண்களுக்குப் பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள்.  தொழிலில் கூடுதல் முதலீடு செய்வீர்கள். உற்சாகமாய் பணிபுரிவீர்கள்.  வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடப்பார்கள். வியாபாரிகள் நேரடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட பணிகளைத் தீவிரமாக முடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும்.  பெண்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

உத்தியோகஸ்தர்கள் பணிகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சியைக் காண்பீர்கள்.  

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தோரின் நட்பு பலன் தரும்.  கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் விளையாட்டுகளில் அக்கறை செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உடனிருப்போருடன் சகஜமாகப் பழகுவீர்கள்.  பெயரும் புகழும் உயரும். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும்.  அரசு விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு அரசு மானியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்துடன் நன்முறையில் இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 29, 30.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நெடுநாள் பிரச்னைகள் தீரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள்.   குடும்பத்துடன் மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைச்சுமையில் பங்கேற்பீர்கள். வியாபாரிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.   விவசாயிகள் விளைச்சலில் புதிய இலக்குகளை எட்டுவார்கள்.  

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் கவனமாக இருக்கவும்.  கலைத்துறையினர் யோசித்து செயல்படவும்.

பெண்களுக்கு மருத்துவச் செலவு குறையும். மாணவர்கள் மனவலிமையைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 1, 2.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களின் உதவியுடன் புதிய தொழில் தொடங்குவீர்கள். வருமானம் உயரும்.  உங்கள் சொல்லுக்கு மரியாதை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் நவீன பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள்.

விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அனுசரணையாக இருப்பார்கள்.  

கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.  பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 3, 4.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பப் பிரச்னையை சரி செய்வீர்கள்.  தடைபட்டு நின்ற திருமணப் பேச்சை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.  இழுபறியான சொத்து பிரச்னைக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.  உடல் உபாதைகள் சீரடையும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலையைத் திட்டமிட்டபடி முடிப்பீர்கள். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும்.  

அரசியல்வாதிகள் நேர்மையாக நடப்பார்கள். கலைத்துறையினர் பிறரை ஊக்கப்படுத்துவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 5.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் பேச்சாலும் செயலாலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசு கௌரவமும் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள்.  உத்தியோகஸ்தர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவார்கள்.  

கலைத்துறையினர் ஆக்கப்பூர்வ முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களைப் படிக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தடைபட்ட காரியங்களை நிறைவேற்றத் தொடங்குவீர்கள்.  தொழிலில் பாதிப்பு இருக்காது.  

பிரிந்த உறவினர்கள் குடும்பத்துடன்இணைவார்கள்.  உத்தியோகஸ்தர்கள் சிக்கலான பணிகளை முடிப்பார்கள்.  வியாபாரிகள் தங்களது வியாபாரத்தில் இருந்த மந்த நிலையை மாற்றுவார்கள்.

விவசாயிகளின் செயல்திறன் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். கலைத்துறையினர் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.

பெண்கள் பொறுப்புடன் இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர் பேச்சுக்கு மரியாதை அளிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.  தொழிலை மேம்படுத்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். கணக்குகளை அரசிடம் சரியாகச் சமர்பிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டு கிடைக்கும்.

வியாபாரிகளின் திட்டங்களுக்கு வெற்றி கிடைக்கும். விவசாயிகள் பிறரின் ஆலோசனையைக் கேட்பார்கள். அரசியல்வாதிகள் எவருக்கும் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள்.

கலைத்துறையினர் கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.  பெண்கள் ஆன்மிகத்தால் உயர்வடைவார்கள். மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோரின் மனக்குறைகளைத் தீர்ப்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிப்பீர்கள்.  வியாபாரிகள் பிறருக்கு உதவுவீர்கள். 

விவசாயிகளுக்கு நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் தன்னடக்கத்துடன் இருப்பார்கள்.  

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். மாணவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT