வெள்ளிமணி

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

8th Sep 2023 12:02 PM

ADVERTISEMENT

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 8 - 14 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பூர்வீகச் சொத்துகளில் வருமானம் வரத் தொடங்கும். தொழிலில் போட்டிகள் குறையும்.  குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்துடன் கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பர். வியாபாரிகள் கணக்கு களைச் சரிபார்க்கவும். விவசாயிகள் புதிய திருப்பங்களைக் காண்பார்கள். 

ADVERTISEMENT

அரசியல்வாதிகள் அநாவசியப் பயணங்களைத் தள்ளிவைக்கவும். கலைத்துறையினர்  பிறருக்கு உதவுவார்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியால் மனம் நிறையும். மாணவர்கள் யோகா கற்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

கடமைகளைச் சரியாக ஆற்றுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.  நல்ல செய்திகள் கிடைக்கும்.  பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சகஜமாகப் பழகுவார்கள்.  வியாபாரிகள் அகலக்கால் வைக்க மாட்டார்கள். விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.  கலைத் துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பார்கள்.

பெண்கள் பெற்றோருக்கு உதவுவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உழைப்பை கூட்டிக் கொள்வீர்கள்.  உங்களிடம் பணிபுரிவோரிடம் கருணையுடன் நடப்பீர்கள்.  உறவினர்களிடம் அனுசரித்து நடப்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். 

வியாபாரிகள் கூட்டாளிகளிடம் வியாபார விஷயங்களைப் பகிர்வார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிக் கொள்கைகளை எடுத்துச் சொல்வார்கள்.  கலைத் துறையினர்  மனதுக்கினிய பயணம் செய்வார்கள்.  

பெண்கள் பாசத்துடன் பழகுவார்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். தொழில் தடைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வீர்கள். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பியபடி இடமாற்றம் பெறுவர்.  

வியாபாரிகளுக்கு அதிக லாபம் உண்டு.  விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும். அரசியல்வாதிகள் கடின உழைப்பை மேற்கொள்வார்கள்.  கலைத் துறையினருக்கு வருவாய் சிறப்பாகவே இருக்கும்.

பெண்களுக்கு பங்கு வர்த்தகத்தில் உபரி வருவாய் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் பரிசு பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் இருந்த சிரமங்கள் முடிவுக்கு  வரும்.  எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.  பழைய நிலங்கள் விற்பனையாகும்.  எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு சிக்கலான பணிகளைச் செய்வீர்கள்.  வியாபாரிகள் பழைய கூட்டாளிகள் பொறாமைப்படும்படி நடப்பீர்கள்.

விவசாயிகள் கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் ரகசியம் காப்பார்கள்.  கலைத் துறையினர் புதிய கடன் வாங்க வேண்டாம்.

பெண்களுக்கு மருத்துவச் செலவு குறையும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சுப காரியங்களால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். சொத்துகளில் லாபம் கிடைக்கும்.  பெற்றோரிடம் இணக்கமான சூழ்நிலை இராது.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடி பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் புதிய மாற்றங்களைக் காண்பார்கள்.  

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள்.  மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படித்து, ஞாபகச் 
சக்தியை வளர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மனக் கவலைகள் நீங்கும். குழந்தைகளின் மேற்படிப்பு குறித்து சிந்திப்பீர்கள். புதிய மாற்றத்துக்கும் வித்திடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் காரியங்களைச் சரியாக முடித்து நற்பெயர் எடுப்பார்கள்.  வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பார்கள். விவசாயிகள் விளைச்சலில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் சிக்கல்கள் குறையும். கலைத் துறையினர் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்தினரிடம் பாசத்துடன் பழகுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப் பிரிவுகளில் சேர்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கொடுத்த வாக்கை காப்பாற்ற தீவிரமாகச் செயல்படுவீர்கள். பணவரவில் தாராள நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் கடின வேலைகளில் பங்கேற்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சாதகமாக இருக்கும். விவசாயிகள் புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவார்கள்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் உயர் பதவிகளைப் பெறுவார்கள். கலைத் துறையினர் தொலைதூர பயணங்களைச் செல்ல நேரிடும்.

பெண்கள் குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் செல்வார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - செப். 8, 9.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் ஆதரவும் நட்பும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மெச்சும்படி நடப்பார்கள்.  

வியாபாரிகள் கூட்டாளிகளால் நன்மை அடைவார்கள். விவசாயிகள் விளைநிலத்தை நன்கு பராமரிப்பார்கள்.

அரசியல்வாதிகள் விரோதிகளையும் நண்பர்களாக்குவார்கள். கலைத் துறையினரின் செயல்பாடுகள் பிறரைக் கவரும். 

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - செப். 10, 11, 12.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் உயரத் தொடங்கும்.  முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் கவனத்துடன் இறங்குவார்கள்.

விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள்.  

அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலால் மனக் குழப்பம் அடைவார்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவி செய்வார்கள்.

பெண்கள் குடும்பத்தில் அமைதி நிலவக் காண்பார்கள். மாணவர்களுக்கு  வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - செப். 13, 14.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள்.  உற்சாகத்துடன் இருப்பீர்கள். போட்டிகள் இருக்காது. குறுகிய தூரப் பயணங்களால் அதிக லாபம் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரிகள் தங்களது ரகசியங்களைக் காப்பார்கள். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். அரசியல்வாதிகள் பயணம் செய்ய நேரிடும். 

கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் பெருகும். பெண்கள்  கணவர் குடும்பத்தினருடன் பக்குவமாகப் பேசி பழகுவார்கள். மாணவர்களின் கோரிக்கைகளை ஆசிரியர்கள் பூர்த்தி செய்வார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடன்பிறந்தோரால் குழப்பங்கள் ஏற்படும். கடுமையாக உழைத்து பொருளீட்டுவீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற விவாதம் செய்ய மாட்டார்கள். வியாபாரிகள் மனச் சோர்வடையாமல் வெற்றியுடன் இருப்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கவனம் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் கட்சிக்காகப் பாடுபடுவார்கள்.

கலைத் துறையினர் புதிய நுட்பங்களை அறிந்து செயல்படுத்துவார்கள். பெண்கள் பேச்சில் கவனமாக இருப்பார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT