தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (மே 26 முதல் ஜுன் 1) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம்
குடும்பத்துடன் பயணம் செய்வீர்கள். சமுதாயப் பணிகளில் விவேகத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் உதவி கிடைக்கும். சுபகாரியங்களில் பேச்சுவார்த்தை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்கலில் நிம்மதி உண்டு. விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்கள் நல்ல முறையில் பழகுவார்கள். மாணவர்கள் கவனமாகப் பேசவும்.
சந்திராஷ்டமம்-இல்லை.
ரிஷபம்
கற்பனைக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். தொழிலை உயர்வாக நடத்துவீர்கள். பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் உபாதைகள் அகலும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். விவசாயிகளுக்கு சிறிய செலவு ஏற்படும். அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் போட்டியாளர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம்-இல்லை.
மிதுனம்
பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிறரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி உண்டு. கலைத்துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவார்கள். பெண்கள் கணவரின் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.
கடகம்
பொருளாதாரம் சீராகும். கடன் பிரச்னைகள் நீங்கும். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
சிம்மம்
தன்னம்பிக்கையும் திறமையும் கூடும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். சொத்துகளில் வருவாய் கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளை விரைந்து முடிப்பார்கள். வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். விவசாயிகளுக்கு கூடுதல் விளைச்சல் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்துக்கு ஆலோசனையைக் கூறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் இல்லத்தில் மழலைப் பாக்கியம் கிடைக்கக் காண்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
கன்னி
தொழிலில் முன்னேற்றம் உண்டு. வருவாய் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் பொருளாதாரமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் வருமானத்தை உயர்த்திக் கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அலுவலர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் வெற்றிக் கொடியை நாட்டுவார்கள். பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். மாணவர்கள் நல்ல நண்பர்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
துலாம்
கடன்கள் வசூலாகும். பயணம் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அனுபவ அறிவு வெளிப்படும். உங்களுக்குக் கீழ் பணிபுரிவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய கிணறை தோண்டுவார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் இருப்பார்கள். கலைத்துறையினருக்கு வருமானம் உயரும். பெண்கள் குடும்பப் பொறுப்பை சுறுசுறுப்புடன் ஆற்றுவார்கள். மாணவர்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
விருச்சிகம்
விலகிய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். சமூகப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு கடன்கள் கிடைக்கும். வியாபாரிகள் கவனத்துடன் செயல்படவும். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கவும். அரசியல்வாதிகளுக்கு புதிய அந்தஸ்து கிடைக்கும். கலைத்துறையினர் பிறருக்கு உதவி செய்வார்கள். பெண்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். மாணவர்கள் தரமான கல்வி நிலையங்களில் சேருவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
தனுசு
மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் இருந்த தடைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் கடின உழைப்பால் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள் பிறரை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் அன்பு மேலோங்கும். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார்கள்.
சந்திராஷ்டமம்- மே 26.
மகரம்
பூர்விகச் சொத்துகளால் வரவு ஏற்படும். இறைவழிபாட்டால் தெளிவு பிறக்கும். வருவாய் உயரும். உத்தியோகஸ்தர்களின் செயலாற்றலை மேலதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். வியாபாரிகள் நண்பர்களின் உதவியால் பிரச்னைகளை சரி செய்வார்கள். விவசாயிகள் விளைச்சலில் மேன்மையைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் வெற்றி காண்பார்கள். கலைத்துறையினர் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்துவார்கள். பெண்கள் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். மாணவர்கள் கண்ணியத்துடன் இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்- மே 27,28.
கும்பம்
உடல் ஆரோக்கியம் சிறக்கும். தொழில் வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். பழைய காரியங்களைச் செய்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவழிக்க நேரிடும். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு வாக்கு அளிக்கும்போது, கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கவனமாகப் படிக்கவும்.
சந்திராஷ்டமம்- மே 29,30,31.
மீனம்
முக்கிய திருப்பங்களைக் காண்பீர்கள். புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். செல்வாக்கு படிப்படியாக உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், பதவி உயர்வும் உண்டு. வியாபாரிகள் வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். விவசாயிகளின் திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத் துறையினரின் படைப்புகள் புகழப்பெறும். பெண்கள் உடல்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்- ஜூன் 1