வெள்ளிமணி

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வருவாய் கூடும். மனக் குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும்.  

சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை கை கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.  வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும். 

விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சாதுர்யமாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களில் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் சுப யோகம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  வழக்கில் வெற்றி கிடைக்கும்.  தொழிலில் புதிய சிந்தனைகள் மேம்படும்.  பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.  உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பார்கள்.  வியாபாரிகள் புதிய முயற்சிகளில் முதலீடு செய்வார்கள்.  

விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்திடுங்கள்.  கலைத்துறையினர் வீண்செலவை செய்ய மாட்டார்கள்.  

பெண்கள் விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள்.  மாணவர்கள் உயர்கல்வி கற்க உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையோடும் உழைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சாதகமான சூழல் உருவாகும்.

வியாபாரிகளுக்கு உழைப்பு கூடினாலும் ஓய்வை எடுப்பார்கள். விவசாயிகளின் தேவைகள் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.

கலைத்துறையினருக்கு பிறருடனான கருத்து வேறுபாடுகள் மறையும். பெண்களின் பயம், கவலைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - 17,18.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.  சொத்துப் பிரச்னைகள் தீரும்.  தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும். 


உத்தியோகஸ்தர்களுக்கு சிறிய அலைச்சல் உண்டாகும். வியாபாரிகளுக்கு புதுவித அனுபவம் ஏற்படும். விவசாயிகளுக்கு பயணங்களால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் உற்சாகத்துடன் இருப்பார்கள். பெண்கள் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பயன்கள் ஏற்படும். மாணவர்கள் பொறுமையாகச் செயல்படுவார்கள்.

சந்திராஷ்டமம்}19,20.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிட மாட்டீர்கள்.  ரகசியங்களைக் காப்பீர்கள்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். வியாபாரிகள் கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகள் சிலருக்கு தனவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளின் எண்ணங்களில் புதுவித மாற்றம் உண்டாகும்.

கலைத்துறையினர் நல்லிணக்கத்தோடு இருப்பார்கள். பெண்கள் உடன்பிறந்தோருடன் கனிவாக இருப்பார்கள். மாணவர்கள் பிறரின் தோழமையை விரும்புவார்கள்.

சந்திராஷ்டமம் - 21,22,23.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். இறைவழிபாட்டில் மனம் முழுமையாக ஈடுபடும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் ஈட்டுவார்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுமுகமான சூழல் நிலவும். பெண்கள் திறமையாகக் காரியமாற்றுவார்கள். மாணவர்களின் பேச்சில் நிதானம் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே இருக்கும்.  கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு அரசு விவகாரங்கள் முடிவுக்கு வரும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.  அரசியல்வாதிகள் எண்ணங்களை மேலிடத்தில் முன்வைப்பார்கள்.

கலைத்துறையினரின் மனக் குழப்பம் நீங்கும். பெண்களை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் சீராகத் தொடரும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பிரிந்த உறவினர்கள் குடும்பத்தோடு சேருவார்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.  உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சிறப்பைக் காண்பார்கள்.  விவசாயிகள் பயிர்களில் லாபம் ஈட்டுவார்கள்.  

அரசியல்வாதிகளின் முயற்சிகள் நிறைவேறும். கலைத்துறையினரின் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் புதிய படிப்புகளில் சேர்ந்து வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலை லாபகரமாக நடத்துவீர்கள்.  உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பீர்கள்.  பெற்றோரின் ஆலோசனையைக் கேட்பீர்கள்.  

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்லும் முயற்சி ஈடேறும்.  வியாபாரிகள் பிறருடன் இணக்கமாகப் பழகுவார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்வார்கள்.  கலைத்துறையினர் புதிய நுட்பங்களில் தேர்ச்சி பெறுவார்கள்.  பெண்கள் கணவருடன் அன்பாக பழகுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

முக்கிய பணிகளைச் செய்ய ஓய்வின்றி உழைப்பீர்கள். பண வரவு சுமாராகவே இருக்கும்.  இறைவழிபாடு நன்மையைத் தரும்.  யோகா கற்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு நம்பிக்கையான வேலையாள்கள் கிடைப்பார்கள்.

விவசாயிகள் கால்நடைகளுக்கு சிறிது செலவழிக்க நேரிடும். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றிநடை போடுவார்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.  பெண்கள் சேமிப்பை கூட்டுவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.  பெற்றோரின் உடல் ஆரோக்கியம் சீராகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். செலவழிக்கும்போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை யோசித்து செய்யவும். விவசாயிகளுக்கு நிலப் பிரச்னை சாதகமாகவே  முடியும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் உதவிகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் பயணம் செய்ய நேரிடும்.  பெண்கள் குழந்தைகளைக் கவனிப்பார்கள். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலை ஏற்றமாக நடத்துவீர்கள்.  காரியங்களை வெற்றிகரமாகச் 
செய்து முடிப்பீர்கள்.  புகழ் உயரும்.  

சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரிகள் லாபத்துடன் வியாபாரத்தை நடத்துவார்கள்.

விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்துவார்கள்.  அரசியல்வாதிகள் நல்ல பெயரை எடுப்பார்கள்.  கலைத்துறையினர் நன்றாகச் செயல்படுவார்கள்.

பெண்கள் உடல் தோற்றப் பொலிவைப் பெறுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT