வெள்ளிமணி

ஒருநாள் ராஜாவான ஸ்ரீவியாஸராஜர்

தினமணி

கலியுகத்தில் காமதேனு, கல்பவிருக்ஷமாகத் திகழும் ஸ்ரீராகவேந்திரரின் முந்தைய அவதாரம் ஸ்ரீவியாஸராஜர்.

பிரம்மதேவன்அவையிலே நாராயண பூஜைக்கு மலர் கைங்கர்யம் செய்து வந்தவர் சங்குகர்ணர். இவர் கிருத யுகத்தில் ஸ்ரீபிரகலாதராகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீபாஹ்லீக ராஜராகவும்,  கலியுகத்தில் ஸ்ரீவியாஸராஜர், ஸ்ரீராகவேந்திரராகவும் அவதரித்தார்.

மைசூருக்கு அருகே பன்னூர் என்ற கிராமத்தில் கி.பி. 1447}ஆம் ஆண்டில் அவதரித்த ஸ்ரீவியாஸராஜர்,  கி.பி. 1539} ஆம் ஆண்டில் ஆனேகுந்தி ஹம்பிக்கு இடையில், துங்கபத்ரா நதி மத்தியில் பிருந்தாவனஸ்தரானார்.
ஆசார்யமத்வரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீபத்மநாப தீர்த்தர் துவங்கி,  ஸ்ரீராகவேந்திரரின் குருவான ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் வரையிலான ஒன்பது மகான்களின் மூல பிருந்தாவனம் உள்ள இடம்தான் தற்போது மிகப் பிரபல்யமாக விளங்கும் நவ பிருந்தாவனம்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி வட்டத்தில் அமைந்துள்ளஅந்த நவ பிருந்தாவனத்தின் நடுநாயகமாகத் திகழ்பவர்தான் ஸ்ரீவியாஸராஜர். ஒருசமயம் திருமலையில் ஸ்ரீவேங்கடரமணரை பூஜிக்க அர்ச்சகர் இல்லாத நிலை வந்தபோது, சுமார் 12 ஆண்டு காலம் வேங்கடவனை பூஜித்து  தொடர்ந்து பூஜிக்கத்தக்க ஒருவருக்கு குழந்தைப் பிராயத்திலிருந்தே பயிற்சியை அளித்து பூஜகராக நியமித்தார்.

இன்றும் ஸ்ரீவியாஸராஜ மடத்தின் பீடாதிபதிகள் திருமலையில் ஆண்டில் ஒருநாள் விசேஷ பூஜைகள் செய்யும் சம்ப்ரதாயம் இருந்துவருகிறது. "ஒருநாள் பூஜை'  போல ஒருநாள்அரசராகவும் ஸ்ரீவியாஸராஜர் இருந்துள்ளார்.

விஜயநகர சாம்ராஜ்ய கிருஷ்ண தேவராயரின் காலத்தில் மன்னரைத் தாக்கும் "குஹயோகபீடை' வந்தது. அதிலிருந்து கிருஷ்ண தேவராயரைக் காக்க ஸ்ரீவியாஸ ராஜரே ராஜ்ய பீடத்தில் அந்த ஒருநாள் மட்டும் அமர்ந்தார். சர்ப்ப ரூபத்தில் வந்த குஹயோகத்தின் மீது காஷாய வஸ்திரத்தை வீசி அதனை எரித்து மன்னரைக் காத்தார். அது முதல் ஸ்ரீவியாஸராயராக  இருந்தவர் ஸ்ரீவியாஸராஜராக மாறினார். கிருஷ்ண தேவராயர் மட்டுமல்லாது, ஆறு அரசர்களுக்கு ராஜகுருவாகவும் விளங்கினார்.

கிருஷ்ண தேவராயரின் காலம்தான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பொற்காலம் என்பதை இன்று சிதைந்த நிலையிலுள்ள ஹம்பியும்கூட நமக்கு உணர்த்துகிறது. இதை மேலும் நிரூபிக்க கிருஷ்ண தேவராயர் ஸ்ரீவியாஸராஜரின் எடைக்கு எடை தங்கம் தந்த துலாபாரத்தை இன்றும் காணலாம்.

ஹம்பி சக்ர தீர்த்தக்கரையில் ,தானே வந்து அமர்ந்த "ஸ்ரீயந்த்ரோத்தாரக ஹனுமன்' தான் ஸ்ரீவியாஸராஜர் ப்ரதிஷ்டை செய்த முதல் ஹனும விக்ரஹம் ஆகும்.

இதன்பிறகே பாரத தேசமெங்கும் 732 ஆஞ்சநேய விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்தார். அதிலும் பெனுகொண்டா எனும் இடத்தில் தினத்துக்கு ஒன்றாக  365 ஸ்ரீஆஞ்சநேய விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்து பிரமிக்க வைத்தார்.

தாத்பர்ய சந்த்ரிகா, நியாயாம்ருத,  தர்க்கதாண்டவமுதலான அனேக க்ரந்தங்களை இயற்றி "சந்த்ரிகாசார்யர்'  எனப் புகழ் பெற்ற ஸ்ரீவியாஸராஜர், "கிருஷ்ண' எனும் முத்திரிகையுடன் நிறைய கீர்த்தனைகளையும் அருளியுள்ளார்.  "கிருஷ்ணா நீ பேகனே பாரோ'  எனும் பிரசித்தி பெற்ற கீர்த்தனை ஸ்ரீவியாஸராஜர் அருளியதே! "சங்கீத பிதாமகர்'  எனப் புகழப்படும் ஸ்ரீபுரந்தரதாஸர்,  ஸ்ரீகனகதாஸர் போன்றோரெல்லாம் இவரிடம் "தாஸதீûக்ஷ' பெற்றவர்களே!

இன்றும் பலப்பல மகிமைகளைப் புரிந்துவரும் ஸ்ரீவியாஸராஜரின்  484-ஆவது ஆராதனைத் திருவிழா மார்ச் 11}இல் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீவியாஸராஜரின் மூல பிருந்தாவனமுள்ள நவபிருந்தாவனத்தில் மார்ச் 10,11, 12}ஆம் தேதிகளில் கோலாகலமாக நடைபெறுகிறது.

திருவள்ளூர், கிரந்தாலயபுரம்,  நெய்வேலி கிராமம்,  பூண்டி நீர்த் தேக்கம் 
அருகில், திருவள்ளூர் } ஊத்துக்கோட்டை சாலையில் அமைந்துள்ள "ஸ்ரீராகவேந்திரக்ரந்தாலயா' என்னும் ப்ரதிரூபமந்திராலயத்தில், பெனுகொண்டாவிலிருந்து வந்துள்ள 365}இல் ஒன்றான ஸ்ரீவியாஸராஜ ஆஞ்சநேயர் உள்ள க்ஷேத்திரத்தில்  ஒருநாள் ஆராதனையாக மார்ச் 11}அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் செல்லும் வழியில் பூண்டி நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி ஸ்ரீராகவேந்திர கிரந்தாலயாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம்.
விவரங்களுக்கு: 98845 52585.
அம்மன்சத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT