வெள்ளிமணி

பணவரவு அதிகரிக்கும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

2nd Jun 2023 03:05 PM

ADVERTISEMENT

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன்2 முதல் ஜூன் 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உழைப்புக்குப் பிறகு வெற்றி உங்களைத் தேடி வரும். எண்ணங்கள் நிறைவேறும்.  உறவினர்களிடம் பாசம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகள் தேவையான பொருள்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்யவும்.

ADVERTISEMENT

விவசாயிகள் பூச்சிகொல்லி மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவார்கள்.  அரசியல்வாதிகள் விவேகத்துடன் பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெண்கள் ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டுவார்கள்.  மாணவர்கள் விடியற்
காலையில் படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 3,4.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.  உடல் ஆரோக்கியமும் மேன்மையடையும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள்.  வியாபாரிகள் சிறிது செலவழித்து கடையை விஸ்தரிப்பார்கள்.  விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவருடனிருந்த மனத்தாங்கல் நீங்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 5,6.


மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சமூகப் பணிகளில் இருப்போருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புது செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளில் தெளிவு கிடைக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் அகலும்.  வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளுடன் இருந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் இணக்கமாகப் பழகுவார்கள். கலைத்துறையினருக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

பெண்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் பெற்றோர் பேச்சை கேட்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 7,8.


கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உபரி வருமானத்தை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவீர்கள். பெற்றோரின்ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள்.  சுப நிகழ்ச்சிகளால் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் விற்பனை முறையில் மாற்றம் கொண்டு வருவீர்கள்.

விவசாயிகள் புதிய வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் தனித்திறன்கள் வெளிப்படும். கலைத்துறையினருக்குப்

பணவரவு சீராக இருக்கும். பெண்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் போட்டிகள் குறையும்.  திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.  வீடு கட்ட கடன்களை வாங்குவீர்கள்.   குழந்தைகளின்  வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தலைநிமிர்ந்து நடப்பார்கள்.

வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு நீர்வளம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்கள் காரியங்களைச் சாதிப்பார்கள். மாணவர்கள் தகுதியான மேற்படிப்பில் சேருவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்படும். பணவரவு இருக்கும். எடுத்த காரியங்களைத் துணிச்சலுடன் முடிப்பீர்கள். நல்லோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

வியாபாரிகள் புதிய கிளைகளைத் திறப்பார்கள். விவசாயிகள் வருவாயைப் பெருக்கிக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

கலைத்துறையினர் தங்கள் கடமையை தீவிரப்படுத்துவார்கள்.  பெண்கள் குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்வார்கள்.  மாணவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உயர்ந்தோரை சிந்தித்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.  தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தன்னம்பிக்கை உயரும். கடன்கள் வசூலாகும்.  உத்தியோகஸ்தர்களுக்குப் பணிமாறுதல் கிடைக்கும். வியாபாரிகள் தங்களது வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவார்கள்.  விவசாயிகள்  குத்தகைகளைத் தேடி பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் தங்களது பெயரை உயர்த்திக் கொள்வார்கள். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பார்கள்.

பெண்கள் அநாவசிய விஷயங்களில் தலையிட வேண்டாம். மாணவர்கள் புதிய நண்பர்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் எண்ணங்களைத் திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். சொத்தில் வில்லங்கம் நீங்கும்.  குழந்தைகளால் குடும்பப் பெருமை உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் உண்டு.   வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் விஷயம் சாதகமாக முடியும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு பண வரவு இருக்கும். பெண்கள் பிறரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உயர்ந்தோரைத் தேடி நட்பு கொள்வீர்கள். எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் குறையும். 

வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் நீர்வரத்து உயரக் காண்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடன்கள் வசூலாகும்.  சொத்தில் வில்லங்கம் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணியை குறித்த நேரத்தில் முடிப்பார்கள். வியாபாரிகள் சிறிய முதலீட்டில் பொருள்களை விற்பனை செய்வார்கள்.

விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

கலைத்துறையினர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். பெண்கள் குடும்பத்துடன் கேளிக்கைகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் பரிசுகளைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அனைத்து காரியங்களிலும் ஏற்றம் பெறுவீர்கள். வருவாய் உயரும். உங்களுக்குக் கீழ்பணிபுரிவோர் உண்மையாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் ஏற்படும் தடைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் செயல்படுவார்கள்.

கலைத்துறையினர் புகழை தக்க வைப்பார்கள். பெண்கள் குடும்ப மேன்மையைப் பேணி காப்பார்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார நிலை சீரடையும்.  மருத்துவச் செலவுகள் குறையும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.   உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு  கிடைக்கும்.

வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில்  சிறப்புகளைக் காண்பார்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் பணிகளைப் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளைச் செய்து புகழடைவார்கள்.

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.

சநதிராஷ்டமம் - இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT