களக்காடு வட்டாரத்தில் 10 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
களக்காடு வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பெய்த மழையானது, வெயிலின் தாக்கத்தைக் தணித்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது. கத்தரி வெயில் தொடங்கியுள்ளதையடுத்து, நண்பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்த காணப்பட்டது.