வெள்ளிமணி

​இ‌ன்​ன‌‌ல்​க‌ள் நீ‌க்​கு‌ம் எறை​யூ‌ர் இறை​வ‌ன்​

கி.ஸ்ரீதரன்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லக்கோட்டையை அடுத்த எறையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு இன்பாம்பிகை உடனுறை இருள் நீக்கீசுவரர் கோயில் பக்தர்களின் இன்னல்களை நீக்கும் தலமாக இருக்கிறது.

அகத்தியர் தென்திசையை நோக்கி பயணமாக வந்தபோது,  இத்தலத்தில் கடம்ப மரங்களின் நடுவே அமைந்திருந்த சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்டிருக்கிறார்.  அந்தச் சமயம் மிகுந்த சூரிய வெப்பத்தினால் உயிரினங்கள் வாடி வதங்குவதைக் கண்டு வெம்மையை குறைக்குமாறு சூரியனையும் தன் கிரணங்களை சந்திரன் அதிக குளிர்ச்சியாக வீசவும் வேண்டினார். சந்திரன் தனக்கு ஏற்பட்ட சண்டாளத்துவத் தோஷம் நீங்க இத்தலத்துக்கு வந்து நீராடி விநாயகர் அருளால் நீங்க பெற்றார்.  வினை நீக்கும் பாலச்சந்திர விநாயகர் என்ற பெயரில் இத்தலத்தில் விநாயகர் சந்நிதி கொண்டுள்ளார்.  சூரியன் தனது மனைவிகளான சஞ்சிகை,  சாயாதேவியுடன் இங்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளார்.

இறைவன் இன்முகத்துடன் வாசம் செய்யும் ஊர் என்பதால் இறையூர் எனப்படுகிறது.  பின்னர், எறையூர் ஆனது. இன்னலையும் இருளையும் நீக்கி இன்பமயமான வாழ்வை அருளுவதால் இத்தலத்தில் இறைவனுக்கு இருள் நீக்கீசுவரர் என்றும் இறைவிக்கு இன்பாம்பிகை என்றும் திருநாமம் கொண்டுள்ளனர். 

எல்லா பிணிகளையும் நீக்கும் சங்கரநாராயண பெருமாளும் இங்கு சந்நிதி கொண்டு அருள்வது சிறப்பு.  இச்சந்நிதி அருகில் ஐந்தடி உயரம் உள்ள பாம்பு புற்று உள்ளது. இந்தப் புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலின் தல விருட்சம் கடம்ப மரம். இந்த மரம் மூவாயிரம் ஆண்டு பழைமையானது. 

இக்கோயிலில் சிவ தீர்த்தம், தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், மகேஸ்வர தீர்த்தம் என்னும் பஞ்ச தீர்த்தங்கள் உண்டு. இங்கு 27 நட்சத்திரங்களுக்கு உண்டான 27 மரங்களும் உள்ளன.  ஒவ்வொரு மரத்தின் கீழும் நர்மதை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பாணலிங்கங்களுடன் கூடிய சிவலிங்கமும், நந்தியும் பிரதிஷ்டை ஆகியுள்ளது சிறப்பு. 

இந்த நட்சத்திர மரங்களுக்கும், லிங்கங்களுக்கும் பக்தர்கள் அவரவர்கள் நட்சத்திரத்தில் பிறந்த நாளன்று தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இறையருளுக்கு பாத்திரமாகின்றனர். பிரதோஷ வழிபாட்டை தவிர தமிழ் மாத பிறப்பு சிறப்பு அபிஷேகங்கள், ஆனி மாத திருக்கல்யாண உத்ஸவம், புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு, ஐப்பசி அன்னாபிஷேகம்,  கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், மகா சிவராத்திரி விழா ஆகியன இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

பழைமையான இந்தக் கோயிலில் ஆன்மிகப் புரவலர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  2019} ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது. வழிபாடுகள், விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

எறையூர் ஸ்ரீபெரும்புதூருக்கு தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. வல்லக்கோட்டையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம். பிப்.18-இல் திரியோதசி திதி, திருவோணம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் சிவனுக்கு சிவ ஆகம முறைப்படி நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற உள்ளன.

27 நட்சத்திர லிங்கங்களுக்கும் பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புக்கு:  93810 02937

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT