வெள்ளிமணி

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும்: வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சிறு நுணுக்கமான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, காரியமாற்றுவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். சேமிப்பை முதலீடு செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறு தடங்கல்களைத் தாண்டி வந்துவிடுவார்கள். வியாபாரிகள் சமரசத்துடன் இருப்பார்கள். விவசாயிகள் விவசாயத்தைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகளின் காரியங்களில் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினரின் புகழ் உயரும். பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் நன்கு ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். 
உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். 
பலரும் ஆதரவாக இருப்பார்கள். 
உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்க மாட்டார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன் அடைவார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் உறுதியாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் நற்பெயரை எடுப்பார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.


மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
மனதில் தெளிவு பிறக்கும். புதிய வாய்ப்புகளைச் செயல்படுத்துவீர்கள். பொருள்களை வாங்குவீர்கள். தொழில் சார்ந்த பயணம் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவார்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பார்கள். அரசியல்வாதிகள் சூழ்ச்சிகளில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். கலைத்துறையினர் புதிய யுக்திகளை அறிவார்கள். பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.


கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். புதிய வாகனங்கள் மூலம் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்ப்புகள் இருக்காது. தோற்றத்தில் புதுப்பொலிவு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் புதிய பணிக்கு மாறுதலாக நினைப்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் கால்நடைகளில் வருவாய் உயரக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணம் கைகூடும். கலைத்துறையினர் வெற்றியைக் காண்பார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மாணவர்கள் நண்பர்களின் உதவிகளைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)
முயற்சியைக் கைவிட மாட்டீர்கள். வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் காரியங்களைச் சரியாகச் செய்து விடுவார்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகள் பூச்சிமருந்துகளைப் பயன்படுத்துவார்கள். அரசியல்வாதிகளின் மனதில் நம்பிக்கை வளரும். கலைத்துறையினர் புதிய கலைஞர்களைச் 
சந்திப்பார்கள். பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் குழப்பத்தைக் கட்டுப்படுத்துவார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தொழிலை புதுவிதமாக நடத்துவீர்கள். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இணக்கமாக வாழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவைப் பெறுவார்கள். விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளைக் கட்சி மேலிடம் புரிந்துகொள்ளும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு உடன்பிறந்தோர் உதவியாக இருப்பார்கள். மாணவர்கள் சிந்தனை போக்கில் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திராஷ்டமம்- இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் நிம்மதி நிறையும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய அனுபவம் கிடைக்கும். வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனமறிந்து வேலை செய்வார்கள். வியாபாரிகள் முன்யோசனையுடன் செயல்படுவார்கள். விவசாயிகள் பிறரின் உதவிகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் செயல்களில் வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் பிறரிடம் நன்கு பழகுவார்கள். பெண்கள் குடும்பத்தில் மழலைகள் உண்டாகக் காண்பார்கள். மாணவர்கள் நண்பர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவார்கள்.சந்திராஷ்டமம்-இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
மனதில் உற்சாகம் குடி கொள்ளும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவம், மதிப்பு, அந்தஸ்து கூடும். பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் மேம்பாட்டைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் புகழ் பெறுவார்கள். கலைத்துறையினர் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்களின் பொருளாதார நிலை உயரும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்- பிப். 3.


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
சிறு ஆதாயங்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். உங்கள் செயல்களால் பிறரைக் கவருவீர்கள். குடும்பத்துக்கு நன்மைகள் செய்ய முற்படுவீர்கள். ஆற்றலும் தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வார்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும். விவசாயிகள் கொள்முதலில் சராசரியான லாபம் காண்பார்கள். 
அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களுடன் நட்பைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பெண்கள் சேமிப்புகளில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம்- பிப். 4,5,6.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிறையும். மனதை உறுத்திய பிரச்னைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். சொத்து பிரச்னைகளில் இழுபறிகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகளில் ஆர்வம் கூடும். வியாபாரிகள் புதிய இடங்களில் வியாபாரம் செய்வார்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். 
அரசியல்வாதிகள் சிறப்பான ஆதரவைப் பெறுவார்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தைக் காட்டக் கூடாது.
சந்திராஷ்டமம்-பிப். 7,8.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
வருமானம் சீராக வரத் தொடங்கும். கடன்களை அடைப்பீர்கள். வீடு மாற்றும் எண்ணம் மேலோங்கும். 
ரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் அனுசரித்து நடக்கவும். வியாபாரிகளின் வியாபார முதலீடு சரியான இலக்குகளை எட்டும். விவசாயிகளுக்கு நன்கு விளைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார்கள். கலைத்துறையினருக்கு கை நழுவிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கவனமாகப் பேச வேண்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைக் காண்பார்கள்.
சந்திராஷ்டமம்- பிப். 9.


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வருமானம் உயரும். 
உத்தியோகஸ்தர்கள்அலுவலகப் பணிகளில் உயர்வைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்கல் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும். 
அரசியல்வாதிகள் நற்பெயரை எடுப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் நற்பலன்களைத் தரும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் விளையாடும்போது எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டமம்- இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT