வெள்ளிமணி

நவராத்திரி தாம்பூலப் பை..!

30th Sep 2022 05:57 PM

ADVERTISEMENT

 

மனிதர்களிடையே பிறருக்குக் கொடுத்து மகிழும் வழக்கம்  வரவே தாம்பூலப் பைகள் வழங்கும் சம்பிரதாயங்கள் ஏற்பட்டன.  தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே.

அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும்போது அம்பி
கையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் 
பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்.

பூக்கள் தரும் பூக்காரி,  நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி அம்மன் யாருடைய ரூபத்திலாவது 
இருக்கலாம்.

ADVERTISEMENT

தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளைக் கடைப்பிடிக்கும்போது மூன்று தேவியரின் அருள்  பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய்,  பழம்,  பூ,  மருதாணி,  கண் மை,   தட்சணை,  ரவிக்கைத் துணி அல்லது புடவை போன்றவற்றை தாம்பூலத்தில் சேர்த்து அளிக்கலாம்.

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்யும்.

கண்ணாடி, கணவனின் ஆரோக்கியத்தை காக்கும்.

வளையல், மன அமைதியை தரும். தேங்காய், பாவம் நீங்கும். பழம், அன்னதானப் பலன் கிடைக்கும்.

பூ, மகிழ்ச்சி பெருகும். மருதாணி நோய் வராதிருக்கும். 

கண் மை திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்கும். தட்சணை  லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.  ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் 
அடையலாம்.

-செளமியா சுப்ரமணியன்


 

ADVERTISEMENT
ADVERTISEMENT