ஐப்பசி பூர பால்குட விழா
காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸமஸ்தானம் ஸ்ரீகாமாட்சி அம்பாள் தேவஸ்தானம் சார்பில், ஐப்பசி பூரம் பால்குட விழா அக். 21}ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 3.30 மணிக்கு பால் குடங்கள் ஸ்ரீசங்கரமடத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கும், பிலாகாசத்துக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
குபேர யாகம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீமஹாலட்சுமி, குபேர யாகம், அக். 24,25}ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்புக்கு} 04366} 242343.
ஸ்ரீபாலா அவதார திருநட்சத்திர திருநாள் திருப்போரூர்} செங்கல்பட்டு சாலையில் செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமத் ஒளவூத் லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் அக். 22}ஆம் தேதி ஸ்ரீபாலா அவதார திருநட்சத்திர திருநாளை முன்னிட்டு, ஏக தின உத்ஸவம் நடைபெறுகிறது. தொடர்புக்கு} 97899 21151.
குரு பூஜை
பூசலாக நாயனார் குரு பூஜையையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ஸ்ரீமரகதாம்பிகை உடனாகிய ஸ்ரீஇருதயாலீஸ்வரர் கோயிலில் குரு பூஜை அக். 27}ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு} 967711 2121.
கந்தசஷ்டி விழா
கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடி கிராமத்தில் உள்ள மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 25 முதல் 30}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்புக்கு} 94442 79696.
சென்னை }64 அஸ்தினாபுரம் வேல்முருகன் நகரில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத வேல்முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக். 25} இல் தொடங்குகிறது. முக்கிய நாள்கள்: அக். 30} சூரசம்ஹாரம், அக். 31} ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீவேல்முருகன் திருக்கல்யாணம், திருவீதி ஊர்வலம்.
திருத்தணி அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா அக். 25 முதல் 31}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்புக்கு} 86240 74865.
குரோம்பேட்டை குமரன் குன்றம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கந்த சஷ்டி விழா அக். 25 முதல் 31}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.