வெள்ளிமணி

இந்த வாரம் எந்த கோயிலில் என்ன விஷேசம்!

18th Nov 2022 06:18 PM

ADVERTISEMENT


சங்காபிஷேகம்
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் அருகேயுள்ள கொத்தங்குடி ஸ்ரீமீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெறு
கிறது.  இதையொட்டி, நவ. 21, 28, டிச. 5,12}ஆம் தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
தொடர்புக்கு} 94442 79696.

திருக்கடவூர் அருள்மிகு அமிர்த கடேசுவரர் கோயிலில் கார்த்திகை மாதத்தில் திங்கள்கிழமைதோறும் நடை
பெறும் 1,008 சங்காபிஷேக தீர்த்தம் (மூலிகைகள் கலந்த ஒளஷதநீர்) மறுநாள் சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதின சமயப் பிரசார நிலையத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
பிரசாதம் வழங்கப்படும் நாள்கள்: நவ. 22, 29, டிச. 6,13.
தொடர்புக்கு} 9444887769.

மகா குரு பூஜை
திருபுவனம் விராலிமலை ஸ்ரீசதாசிவ சுவாமிகள் மடாலயத்தில் சுவாமிகளின் 96}ஆம் ஆண்டு மஹா குரு பூஜை நவ. 26}ஆம் தேதி (சனிக்கிழமை} கார்த்திகை மூல நட்சத்திரம்)  நடைபெறுகிறது.  முக்கிய நிகழ்வுகள்: நவ. 24} சித்தானுக்கிரஹ விநாயகர், சித்த தட்சிணாமூர்த்தி, அபிஷேகம், நவ. 25} ஆறுமுகப் பெருமான் அபிஷேகம்,  நவ. 26- குரு பூஜை, பல்லக்கில் சுவாமிகளின் விக்ரஹம் வீதியுலா.
தொடர்புக்கு} 99441 78340, 74187 43762.

நாம சங்கீர்த்தனம்
ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண தின சிறப்பை முன்னிட்டு, கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் தெருவில் உள்ள ஸ்ரீராம் ராம் சேவா சங்க வளாகத்தில்,  நவ. 20}ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மும்பை ஸ்ரீநிவாஸன் பாகவதர் குழுவினரால் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்புக்கு} 94445 16496.

ADVERTISEMENT

சகடபுர மஹா ஸ்வாமிகள் சென்னை விஜயம்
ஸ்ரீசேஷத்ர சகடபுர}ஸ்ரீவித்யா பீடாதீஸ்வர ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் சென்னை விஜயமாக, நவ. 20}ஆம் தேதி காலை கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் தெருவில் உள்ள கிளை மடத்தில் அருள்பாலிக்கிறார். டிச. 15} சுவாமிகளின் ஜன்ம ஜெயந்தி மகோத்ஸவம் முன்னிட்டு, டிச. 5 முதல் சிறப்பு 
ஹோமங்கள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு} 94440 38024, 044}22397900.

மஹோத்ஸவம்
அரக்கோணம் சுவால்பேட்டை  அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயிலில் ஸ்ரீஅம்ருதபலவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி கார்த்திக மஹோத்ஸவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: நவ. 18} ஸ்ரீஅம்ருதபலவல்லி தாயார் வில்வார்ச்சனை, நவ. 22} ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் ஸ்ரீஅம்ருதபலவல்லி தாயார் úஸர்த்தி புறப்பாடு,  நவ. 25, டிச. 2, டிச. 9}ஸ்ரீஅம்ருதபலவல்லி தாயார் வில்வார்ச்சனை. ஜன. 14 வரை அதிகாலை 4.45 முதல் 6.30 மணி வரை தநூர் மாஸ ஆராதனம்.

அரக்கோணம் பழனிப்பேட்டை ஸ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்வாமி கோயில் திருப்பவித்ரோத்ஸவம் நவ. 21, 22}ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
தொடர்புக்கு} 978866 4622, 95856 88185.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT