வெள்ளிமணி

திருமண முயற்சிகள் கைகூடும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் ( மே 6 -12)

6th May 2022 05:27 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய ஏற்றத்தை எட்டுவீர்கள்.  ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.   

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் வரும்.  வியாபாரிகள் கூடுதலாக உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்.

ADVERTISEMENT

விவசாயிகள் தோட்டப்பயிர் செய்து பயன் பெறலாம்.  அரசியல்வாதிகளுக்கு உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைத்துறையினர் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்குப் பேச்சுத் திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள்.  கல்வி கற்பதில் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். 

அனுகூலமான தினங்கள்: 06, 07 
சந்திராஷ்டமம்: இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வரவு சீராக இருக்கும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் கொள்ள வேண்டும்.  உறவினர்களை அனுசரித்து நடக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய இடமாற்றம் ஏற்படும்.  வியாபாரிகள் நேரடியாகவே தாங்களே முன்நின்று வியாபாரத்தை  நடத்தினால் வளம் பெருகி பழைய பாக்கிகளை அடைத்து மனம் மகிழ்வீர்கள்.

விவசாயிகளுக்கு மதிப்பு கூடும்.  அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்களால் சில இடையூறுகள் ஏற்பட்டாலும், எதுவும் நடவாமல் காப்பாற்றிக் கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு புது ஒப்பந்தங்களில் கையெழுத்தாகும்.  ண்களுக்குப் பொருள் வரவு உண்டு.  மாணவர்கள் படிப்பில் நன்கு தேர்ச்சி பெற உழைப்பீர்கள்.

அனுகூலமான தினங்கள்: 07, 08. 
சந்திராஷ்டமம் இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சொத்து பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் இருக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.  விவசாயிகள் புதிய நபர்களிடம் அனுசரித்து கவனமாகப் பழகவும்.  

அரசியல்வாதிகளின் மனதில் மாற்றம் ஏற்படும். கலைத்துறையினர் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

பெண்களின் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.  மாணவர்கள் சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.  

அனுகூலமான தினங்கள்: 06, 08. 
சந்திராஷ்டமம் இல்லை. 

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வியாபாரிகள் எந்தவொரு செயலிலும் திருப்தியாக ஈடுபடுங்கள்.  விவசாயிகளுக்கு மாற்றமான சூழல் உண்டாகும்.

அரசியல்வாதிகள் கூட்டாளிகளை நம்பி எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். அரசியல் தலைவர்களின் உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். மகளிருக்கு அலுவலகச் சூழ்நிலை மன அமைதியைத் தரும்.  மாணவமணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளின் மூலம் நல்ல வேலை கிடைத்துவிடும். 

அனுகூலமான தினங்கள் 08, 09. 
சந்திராஷ்டமம் இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆன்மிகச் சிந்தனைகள் ஓங்கும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல முடிவு கிடைக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.  வியாபாரிகள் போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும் வருமானமும் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும்.  பெண்மணிகள் குடும்ப 
நலனைக் காத்தருள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  
அனுகூலமான தினங்கள் 07, 09.
சந்திராஷ்டமம் இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பச் சூழ்நிலை திருப்தியாகவே இருக்கும். குழந்தைகளினால் பெருமை அடைவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்து வாழ்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். சுபச் செலவுகளினால் பணம் விரயமானாலும் மனதுக்கு நிறைவை ஏற்படுத்தும். 

அரசாங்க ஊழியர்கள் எந்தத் தவறும் செய்யாமல் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகளின் உற்பத்தி பெருகும். கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். அரசியல்வாதிகள் எவரையும் நம்பாமல் ஆராய்ந்து முடிவெடுங்கள்.

அதிகம் பேசினால், ஆபத்து. கலைத்துறையினருக்கு நன்மைகள் தேடிவரும்.  பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்.  மாணவர்களுக்கு கல்வியில் தீவிர ஆர்வம் உண்டாகும்.

 அனுகூலமான தினங்கள் 06, 10. 
சந்திராஷ்டமம் இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வருமானம் போதிய அளவில் இருப்பதால் பணப் பற்றாக்குறை இராது.  உடல் உபாதைகள் ஏற்படும்.  பயணங்கள் செய்து மகிழ்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் மிகுந்த அனுகூலம் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய தொழில் துறைகளில் முதலீடு செய்வீர்கள். விவசாயிகளோ திறமையாகப் பயிர் செய்து பலனைப் பெறுவீர். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும்.

கலைத்துறையினரின் வாழ்வாதாரம் உயரும்.  பெண்களின் குடும்ப நிர்வாகம் நல்லபடியாகவே நடக்கும். உறவினர்களிடம் அனுசரணையுடன் நடந்து கொள்வீர்கள்.  மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு உண்டு.

அனுகூலமான தினங்கள்: 07, 11. 
சந்திராஷ்டமம் : இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். உடல் சோர்வும் ஏற்படும். அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அமைதியாக அனைவருடன் நடந்து கொள்ளவும். வியாபாரிகளின் விற்பனையும், லாபமும் சுமாராகவே இருக்கும்.   விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.  

அரசியல்வாதிகள் மேலிடத் தலைவர்களின் ஆதரவினால் சில உயர்ந்த அந்தஸ்தை எட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு அளவோடு நன்மைகள் உண்டாகும்.   பெண்களின் குடும்பப் பிரச்சினைகள் கவலை அளிக்கும்.

மாணவர்கள் கல்வியில் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள்.  

அனுகூலமான தினங்கள் : 08, 12. 
சந்திராஷ்டமம் : 6.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமான அதிகரிப்போடு செலவும் இருக்கும்.  உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.  உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலப் பொறுப்புகள் காரணமாக அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு  அரசியல் தலைவரின் தொடர்பும், அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிட்டும்.

கலைத்துறையினருக்கு நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் பல வகையான முதலீடு செய்வீர்கள்.  பெண்களுக்குப் புத்திரப் பாக்கியம் கிட்டும்.   மாணவர்களின் படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். 

அனுகூலமான தினங்கள் : 06, 11. 
சந்திராஷ்டமம் : 7, 8, 9.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நன்மைகள் ஒரளவு இருந்தாலும் திருப்தியான சூழலில் வாழ முயற்சி செய்வீர்கள்.  பலர் சொந்த வீடு முயற்சியில் இறங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். 
உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்புகளும், வேலை பளுவும் ஏற்பட்டாலும் பொறுப்புகள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சலும், கால்நடையும் அபிவிருத்தி அடையும். அரசாங்க ஆதரவுகளும், சலுகைகளும் தேடிவரும்.  கலைத் துறையினருக்கு புதுவாய்ப்புகள் வரும்.  பெண்களுக்கு மகிழ்ச்சி பெருகும். மாணவர்கள் கூடாநட்பு கேடில் முடியும் .  
அனுகூலமான தினங்கள் : 09, 12: 
சந்திராஷ்டமம்: 10, 11.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.  உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று வருவீர்கள். அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.  வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் அலட்சியம் கூடாது. விவசாயிகள் கூட்டுத் தொழிலில் ஒற்றுமை இருந்தாலும் சிறிது கவனமும் தேவை.  அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும்.  கலைத்துறையினருக்கு வாழ்வாதாரம் உயரும். பெண்களுக்கு உடல்நலனில் மிகுந்த அக்கறை தேவை.  யோகா, பிராணாயாமம் தினசரி மேற்கொள்ளவும்.  மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். 

அனுகூலமான தினங்கள் :10,11. 
சந்திராஷ்டமம்: 12.


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நல்லதை நினைத்து நல்லதே செய்வீர். குடும்பத்தினர்களின் ஒற்றுமை வியக்கத்தக்கதாக இருக்கும்.  விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் நட்புடன் பழகுவீர்கள். வியாபாரிகள் எவருக்கும் கடன் கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ ஏற்புடையதாகாது. விவசாயிகள் விவசாயக் கூலிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கலைத்துறையினர் மிளிர்வீர். பெண்மணிகள் புதிய ஆடைகளை வாங்குவீர்கள்.  மாணவ மணிகள் ஆசிரியர் அறிவுரைகளை ஏற்புடைய தாக்கிக் கொண்டால் நல்லது. 

அனுகூலமான தினங்கள்: 10, 12. 
சந்திராஷ்டமம்: இல்லை.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT