வெள்ளிமணி

பதவி உயர்வு காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (மார்ச் 25-31)

25th Mar 2022 04:40 PM

ADVERTISEMENT

மார்ச் 25 முதல் மார்ச் 31 வரையிலான இந்த வார ராசி பலன்களை தினமணி ஜோதிடம் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பண வரவு நன்றாக இருக்கும்.  தடங்கல்களால் சிரமங்கள் உண்டாகும். வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.

உத்யோகஸ்தர்களுக்கு நெருக்கடி சூழ்நிலைகள் குறையும். பேச்சுவன்மையால் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவீர்கள். வியாபாரிகளின் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். நெருக்கடிகள் குறையும். விவசாயிகளுக்கு தனவரவில் உற்சாக சூழ்நிலை உருவாகும். கூலித்தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் கடினத்தையும் சுலபமாக்குவீர்கள்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகளின் பேச்சாற்றால் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கலைத்துறையினர்களுக்கு புதிய பொருள்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சங்கடங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பெண்மணிகளுக்கு சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.  மாணவமணிகளுக்கு கல்வி ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகள் சாதகமாகும், புதுவிதமான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீ ர்கள்.

பரிகாரம்: செவ்வரளி மலரினால் துர்க்கைக்கு வழிபாடு செய்யுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 25, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் அமையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் விவாதங்கள் புரியாமல், பணிகளைத் திறம்பட முடித்து கொடுக்க உழையுங்கள்.வியாபாரிகளின் வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வழக்குகள் இழுபறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கும். விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். புதிய இலக்குகள் தடைகளை அகற்றும். 

அரசியல்வாதிகள் மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கலைத்துறையினர்களுக்கு ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமையும். 

பெண்மணிகளுக்கு கணவர் வீட்டாருடன் புரிதல் தேவை. அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து உறவு பாராட்டுவீர்கள். மாணவமணிகளுக்கு கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றியும், உடன் பயிலும் மாணாக்கர்களால் ஆராய்ச்சியிலும் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் - தாயாரை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 27, 28.சந்திராஷ்டமம்: 25, 26.

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

புதிய முயற்சிகளில் சிந்தித்து  செயல்படவும். பொருளாதார மந்த நிலை அகலும். கடின முயற்சியுடன் கூடிய காரியமொன்று வெற்றி இலக்கை தொடும்.

உத்யோகஸ்தர்கள் மனதிலிருப்பதை எல்லாரிடமும் வெளிப்படையாக கூறாதீர்கள். சிலருக்கு ஊதிய உயர்வு, உத்யோகத்தில் மாற்றம் போன்றவை நிகழும். வியாபாரிகள் வேலையாட்களை வியாபாரப் பணிகளில் ஈடுபடுத்தும்போது, தட்டிக் கொடுத்து பாராட்டி, ஊக்குவித்து வேலை வாங்கவும். விவசாயிகள் சிக்கல்கள் குறைந்து புதுப்புது நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள். முன்னேற்றம் நிறைந்து காணப்படும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடத்தில் ஒற்றுமையை அதிகரிக்கப் பாடுபடுவீர்கள். மேலிடத்தின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கலைத்துறையினருக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் தடைகள் நீங்கும். சக கலைஞர்களுக்கு உதவிகளைப் புரிந்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகளின் பொருளாதாரம் உயரும். நண்பர்களின் சந்திப்பினால் திருப்பங்கள் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். மாணவமணிகளுக்கு மேற்படிப்பு, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கையம்மனை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 25, 29. சந்திராஷ்டமம்: 27, 28.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தெய்வ அனுகூலத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகள் அடங்குவார்கள். உடல்நிலையில் சற்று அக்கறை காட்ட வேண்டும். மூத்தவர்கள் வகையில் சிறிது குழப்பங்கள் ஏற்படும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் சுமை இருந்தாலும் எடுத்ததை முடித்து கொடுத்து நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் உழைப்புக்கேற்ற பலன்களை அனுபவிப்பீர்கள். கால்நடை வைத்திருப்போர் நல்ல லாபம் காண்பார்கள். விவசாயிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பாராட்டு மழையில் நனைவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கெடுபிடியால் சற்று வருத்தப்படுவீர்கள். புதிய பொறுப்புகளை தொண்டர்களின் அனுசரணையுடன் நடத்தி முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். திறமையைக் கூட்டிக் கொள்ளவும். 

பெண்மணிகள் கணவருடன் பரஸ்பரம் விட்டுக் கொடுங்கள். பெற்றோர்களின் அரவணைப்பைப் பெற்று மகிழ்வீர்கள். மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்து படித்து தேர்வில் நிறைய மதிப்பெண்களைப் பெற்றிட உழைப்பீர்கள். 

பரிகாரம்: ஐயப்பனை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 27, 28. சந்திராஷ்டமம்: 29, 30.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் ஏற்றம், இறக்கமாகவே இருக்கும். ஆற்றலை கூட்டுங்கள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உடன் பிறந்தோர்களினால் சிறிது குழப்பம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் நட்புடன் இருக்க முயற்சியுங்கள்.  

தங்களுடைய பணிகளை புரிந்து கொண்டு செயல்படவும். வியாபாரிகள் சிறு தூரப் பயணங்களினால் லாபம் காண்பீர்கள். புது ஒப்பந்தங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பீர்கள். பார்வை சார்ந்த இன்னல்களால் சற்று சிரமப்படுவீர்கள். உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணங்களைத் திறம்பட நடத்தி முடிப்பீர்கள். மக்களின் ஆதரவை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளுக்கேற்ப ஒத்துழைப்பு உண்டாகும்.

பெண்மணிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் மேம்படும். மாணவமணிகள் பிறமொழி பேசுபவர்களுடன் சற்று கவனமாக இருங்கள். அதிகாலை வேளையிலேயே எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்து வரவும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 26, 30. சந்திராஷ்டமம்: 31

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பேசும்போது நிதானத்துடன் பேசுங்கள். வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்யப் பழகிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மழலைகளினால் மகிழ்ச்சி உண்டாகும்.  எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். 

உத்யோகஸ்தர்கள் தடைகற்களை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடமிருந்து தொழில் நடிவடிக்கைகளை ரகசியமாக வைப்பது நல்லது. வியாபாரிகள் தனித்தே வியாபாரம் செய்வது நல்லது. பொருளாதார ஏற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளினால் வருமானம் திருப்தியாக இருக்கும் வருமானத்தைப் பெருக்க ஊடுபயிர் உற்பத்தி செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் தங்களுக்கிட்ட பணிகளை தொண்டர்களோடு சேர்ந்து நேர்த்தியாக முடிக்க முயற்சி எடுங்கள். பிரயாணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள். வெளிநாட்டு கலைப்பயண நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி தரும். பெண்மணிகளுக்கு கணவரின் ஆரோக்கியம் மேம்படும். அக்கம் பக்கத்தினரின் அனுசரணை கிடைக்கும். 

ஆடைகளின் சேர்க்கையும், குழந்தைகளின் வரவும் மகிழ்ச்சி கொடுக்கும். மாணவமணிகள் கல்வியில் போதிய கவனம் கொள்க. விளையாட்டுகளில் பாராட்டும் பரிசும் பெறுவீர்கள்.

பரிகாரம்: மகான்களை தரிசியுங்கள். அனுகூலமான தினங்கள்: 25, 28. சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பெரியோர்களின் ஆசியும், புகழும் கிட்டும் காலகட்டம் இது. பொருள் வரவும், தேக ஆரோக்கியமும், உறவினர்களின்  ஆதரவும் சீராகவே இருக்கும். வீடு, மனை வாங்குவதைப் பற்றி ஆலோசிப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி பொருள்களை வரவழைத்து  லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் நீர்வரத்து அதிகரித்து மகசூல் பெருகி லாபம் அடைவீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கும் நீர்வரத்து வசதிகளைச் செய்து கொள்ள தற்போதே வித்திடுவீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களைச் செவ்வனே தொண்டர்களின் உதவியுடன் முடித்து மேலிடத்திடம் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத்துறையினர் முயற்சியும், ரசிகர்களின் ஆதரவும், சக கலைஞர்களின் உதவியும் உங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பெண்மணிகள் கணவனைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. மாணவமணிகளுக்கு ஆசிரியரின் உதவியால் கோரிக்கைகள் நிறைவேறும். படிப்பிலும் நிறைய மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஜெய ஜெய துர்கா என்று ஜபியுங்கள். அனுகூலமான தினங்கள்: 26, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அனுகூலமான திருப்பங்களால் மனக்குறை அகன்று மகிழ்ச்சி பெருகும். வேலைகளும் சற்று எளிதாக முடிந்து வெற்றி பெறுவீர்கள். போராட்டங்கள் முடிந்து இருள் விலகி பிரகாசங்கள் தெரியும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வினால் மகிழ்ச்சி குடிகொள்ளும். எதிர்வரும் இடையூறுகளை மிகவும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் லாபம் பெருக புதிய அணுகுமுறையைக் கையாளுங்கள். இல்லத்தில் சுபநிகழ்வுகள் கூடும். விவசாயிகள் கால்நடைகளால் மிகுந்த நன்மையடைவீர்கள். விவசாய உபகரணங்களையும் வாங்கி வளர்ச்சிக்கு வித்திட்டு வேளாண்மையைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் நலிந்த தொண்டர்களுக்கு உதவி புரிந்து அவர்களது அன்புக்கு வித்திடுவீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை மந்தமாகவே இருக்கும். கலைஞர்கள் ஒத்துழைப்பு உதவியாக இருந்து காரியங்கள் நிறைவேறும். 

பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாட்டுத் துறையில் தடம் பதிக்க முற்படுவீர்கள். யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவைகளையும் மேற்கொள்ளுங்கள்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 26, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். முன்கோபத்தை விட்டொழித்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுங்கள். சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களின் உடலாரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணங்களால் சில ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூடுதலான உழைப்பினால் வருமானம் இரட்டிப்பாகும். கொடுக்கல் வாங்கலில் இடைத்தரகர்களைத் தவிர்க்கவும். விவசாயிகள் கால்நடைகளை கவனத்துடன் பராமரியுங்கள். திட்டமிட்ட செயல்களைச் செய்து முடிக்க மிகுந்த சிரமம் ஏற்படும்.

அரசியல்வாதிகள் போராட்டங்களைத் தவிர்த்து அன்பு பேணுங்கள். பயணங்களால் சில நன்மைகளும் தேடி வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திட்டாலும் வருமானத்தில், சற்று இழுபறி நிலை ஏற்படும். பெண்மணிகளுக்கு மழலையின் வரவு மகிழ்ச்சியைத் தரும். கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். 

தந்தை வழி உறவினர்களால் சிறிது குழப்பங்கள் ஏற்படும். மாணவமணிகள் விளையாடும்போது கவனமாக இருக்கவும். ஆசிரியர்களிடம் நற்பெயர் வாங்க உழைத்திடுவீர்கள். படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு மேற்கொள்ளவும். அனுகூலமான தினங்கள்: 27, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்ப அமைதி ஓங்கும். பூர்வீகச் சொத்துகளிலிருந்த பிரச்னைகள் தீரும். நல்லவர்களின் நட்பு கிட்டும். நீண்ட நாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். வீடு, மனை வாங்குவதைப் பற்றி ஆலோசிப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்கள் பதவி உயர்வுடன் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பத்துடன் இணைவார்கள். வியாபாரிகளுக்கு உங்கள் செயல்களில் உங்கள் எண்ணங்கள் பிரதிபலிக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். விவசாயிகள் நலத்திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். தானிய உற்பத்தியில், மகிழ்ச்சிகரமான நிறைவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் அயராத உழைப்பு உங்களுக்கு நற்பெயர், புகழ் கிடைக்க வழி ஏற்படுத்தும். எதிரிகளை இனம் கண்டு கொண்டு விலக்கிடுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களைக் கெüரவப்படுத்துவீர்கள். திறமையினால் பல ஒப்பந்தங்கள் தேடிவரும். 

பெண்மணிகள் தெய்வ அனுகூலத்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பீர்கள். கணவர் வீட்டாருடன் சுமுகமான உறவு மேம்படும். மாணவமணிகள் பெற்றோர் சொற்படி நடந்து  கொள்வீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 27, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளியூரிலிருந்து வந்த நல்ல செய்தியால் மனம் மகிழ்வீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். வீட்டிலும், வெளியிலும் நெருக்கடிகள் மறையும்.  

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடின உழைப்பைக் கொண்டு செயலாற்றுங்கள். பதவி உயர்வு தேடி வரும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை. 

உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் சற்றே விலகும். விவசாயிகளுக்கு நவீன சாதனங்களால் விவசாயம் பொலிவுறும். கடன் பிரச்னைகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளினால் உங்கள் புகழ், பெயர் அதிகரிக்கும். கட்சியில் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் நல்லதொரு நிர்வாகத்திறனை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது கதையம்சங்களினால் திறமை கூடும். வருமானம் வரத் தொடங்கும்.

பெண்மணிகளுக்கு பிள்ளைகள் வழியில் பெருமைகள் வந்து சேரும். ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். மாணவமணிகள் படிப்பில் உயர்ந்து காணப்படுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டிலும் முத்திரை பதிப்பீர்கள்.

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய், ஞாயிறன்று ராகு கால பூஜை செய்யவும். அனுகூலமான தினங்கள்: 30, 31. சந்திராஷ்டமம்: இல்லை

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.  அனைவரிடத்திலும் நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்வீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் வேலைகளைத் திட்டமிட்டு திறம்பட முடித்து மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு சற்று தள்ளிப்போகும். வியாபாரிகள் எதிலும் மிகுந்த கவனத்துடன், நேரடிப் பார்வையிலேயே வியாபாரத்தைக் கவனித்தால் ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். கடும் உழைப்பினால் மகசூல் பெருகும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.

அரசியல்வாதிகள் கவனமாகக் காரியமாற்றுவது நல்லது. தொண்டர்களைக் கடிந்து கொள்ளாமல் அன்பு பாராட்டுங்கள்.  கலைத்துறையினர் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு திறமையை நிரூபியுங்கள். பெண்மணிகள் கணவருடன் சற்று விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உறவினர்கள் வரவால் சற்று செலவு கூடும். மாணவமணிகள் அதிகாலையிலேயே எழுந்து பாடங்களை படியுங்கள். வெளிவிளையாட்டுகளில் தீவிரக் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தன்று அருகம்புல் அர்ச்சனை செய்யவும். அனுகூலமான தினங்கள்: 26, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT