வெள்ளிமணி

மகானுக்கு மணிமண்டபம்!

25th Mar 2022 03:53 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் யோகியாய், சித்தராய், பித்தராய், உன்மத்தராய் வாழ்ந்த மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆவார். இவரைப்பற்றி அறியாதவர்கள் தமிழ்நாட்டிலே ஏன் பாரத தேசம் முழுவதும் இல்லை எனலாம். திருவண்ணாமலை கிரிவலப் பாதை தொடக்கத்தில் ரமணாஸ்ரமம் முன்னதாக இவருடைய மகாசமாதி உள்ளது.

இப்படியாக, மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வசித்த காஞ்சி இல்லத்தில் ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. தற்போது  "ஸ்ரீ சேஷாத்ரி நிவாஸம்' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மகாசமாதி உள்ளது.  ஈரோடு அருகில் ஊஞ்சலூரில் ஒரு அதிஷ்டானம் (சூட்சும யோக சமாதி) உள்ளது. தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் 18 சித்த புருஷர்களுடன், மகானுக்கும் சேர்ந்து ஆலயம் உள்ளது. ஆனால் அவருடைய அவதாரத்தலமான வழூரில் எந்த வித நினைவுச் சின்னமும் இல்லையே என்ற குறை சில காலமாக அவருடைய ஆத்மார்த்த பக்தர்கள் உள்ளத்தில் பரிமணித்து வந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் அமையப் பெற்றது தான் மகானுக்கான மகத்தான மணி மண்டபம்.

இங்கு ஏற்கெனவே பழமையான பிரம்ம புரீசுவரர் சிவன் கோயிலும், சுந்தரவதன பெருமாள் கோயிலும், முத்து மாரியம்மன், பொன்னியம்மன் கோயில்களும் உள்ளது.
தற்போது ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மகானின் மணிமண்டபமும் அமையவிருக்கின்றது.  அருகே உள்ள குளத்தின் படித்துறை காமகோடி படித்துறை என்றே அக்காலத்திலிருந்தே அழைக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் பிம்ப பிரதிஷ்டை மற்றும் மணிமண்டப கும்பாபிஷேகம் ஏற்கெனவே கடந்த ஜனவரி 23} ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால்  கரோனா தொற்று நோய் பரவலை கருத்தில் கொண்டு பிறிதொரு நாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட இந்த கும்பாபிஷேகம் தற்போது ஏப்ரல் 6-ஆம் தேதி புதன்கிழமை, பங்குனி 23, பஞ்சமி ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பல்வேறு மடாதிபதிகள், ஆதின கர்த்தாக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.  முன்னதாக ஏப்ரல் 3 முதல் 5 வரை வேதபாராயணங்கள், தேவார இன்னிசை, நாமசங்கீர்த்தன பஜனைகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.

வழூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுகாவில் மேல் மருவத்தூரிலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து மார்க்கத்தில் மருதாடு கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. காஞ்சியிலிருந்து 40 கி மீ தூரத்திலும், தென்னாங்கூரிலிருந்து 8 கி.மீ தூரத்திலும் உள்ளது. 

மேலும் தகவல்கள் தொடர்பிற்கு: சேஷாத்ரி ஸ்வாமிகள் ( வழூர்) டிரஸ்ட் உறுப்பினர்கள். மஹாலட்சுமி சுப்பிரமணியம்: 9840053289, பட்டாபிராமன்: 9962019172

-எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT
ADVERTISEMENT