வெள்ளிமணி

திராட்சை செடியும் மனிதனும்...

25th Mar 2022 03:57 PM

ADVERTISEMENT

திராட்சை செடியும் மனிதனும்...


திராட்சை  செடி படைப்பின்  காலமுதல்  பேசப்பட்ட  செடி ஆகும்.  அதன் பழமும் ரசமும்  மனிதரால்  உண்ணப்பட்டது.  திராட்சை  செடியின்  தனி தன்மை அது விதை  நட்டு முளைக்காது.  செடியின்  கிளையை  பூமியில் நட்டாலே  அது முளைத்து செடி,  கொடியாக  வளர்ந்து  கனி தந்துவிடும்.  இதனை  செடி என்றும் சொல்லலாம்.  கொடி என்றும்  சொல்லலாம்.  இன்று இஸ்ரவேல்  நாட்டில்  செடியாகவே  வளர்க்கின்றனர்.

வேதாகமத்தில் திராட்சை  கொடியைப்பற்றி  ஒரு உவமை கதை பழைய  புதிய  ஏற்பாட்டில்  உள்ளது.  

ஏசாயா:  5:1 } 5  பகுதியில் என்  நேசருக்கு  வளமையான குன்று  உண்டு. அதனை  தோட்டத்து  வேலைக்காரன்  சீர்படுத்துகிறான்.  கற்களை எல்லாம்   வேலியாக  அமைக்கிறான்.  அப்பூமியை நன்கு  உழுகிறான்.  எரு போடுகிறான். நல்ல மழை  இறைவன்  தருகிறார்.  உடனே  தோட்டக்காரன் குன்று முழுவதும்  திராட்சை  கொடியினை துண்டு துண்டாக  வெட்டி நடுகிறான்.

ADVERTISEMENT

நட்டகிளைகள் துளிர்க்க  தொடங்குகிறது.  ஒரு இலை  இரண்டு  இலை துளிர்க்க கொடியாக  வளர்கிறது.  தோட்டக்காரன்  ஒவ்வொரு கொடிக்கும் கொம்பு நட்டு படற  வைக்கிறான்.  மேலும் கொம்புக்கு மேல்  வளர்ந்ததால் குன்று  முழுவதும்  பந்தல்  அமைத்து  படர விடுகிறான்.  நல்ல  மழை,  கொடி மிக செழுமையாக  படர்கிறது.  

பூ பூக்கும் காலம்  வெண்மையானப் பூ  கொத்து  கொத்தாய்  பூத்து குலுங்குகிறது.  பூ,  பிஞ்சாகி , காயாகி, கொத்து  கொத்தாய்  திராட்சை தொங்குகிறது.    உடனே பழ காலத்தில் பழச்சாறு  பிழிய  ஆலையை  தோட்டத்துக்காரர்  அமைக்கிறார்.  தோட்டம் முழுவதும்  பந்தல்  நிறைய பழம்.  பழம்  ஒருவனாக  அறுத்து  அதனை ஆலையில்  கொட்டி பழம் மிதிக்கின்றான்.  
மிக பெரிய  வேலை, குன்று முழுவதும் உள்ள பழங்கள் அறுக்கப்பட்டு ஆலையால்  பழம் பிழியப்பட்டது.  பிழிந்த  திராட்சை  ரசத்தை  தோட்டக்காரன் ருசி பார்த்தான். அவனுக்கு  மிக பெரிய  கெட்ட செய்தி  பழரசம் காட்டு செடியின் பழம் போல் கசப்பானது.  பருகினால்,  பருகிறவன் பைத்தியம் ஆகிவிடுவான்  எல்லாம் வீண்.  கோபம் கொண்ட  தோட்டக்காரன்  திராட்சை கொடிகளை  வேறுக்கு  மேல் ஒரு முழம் விட்டு வெட்டி கொடிகளை  வேலிக்கு வெளியே  தள்ளி காட்டு திராட்சை  கொடியானபடியால்   நெருப்பு  வைத்து கொளுத்திவிட்டான். தோட்டக்காரன்  தன் திராட்சை  தோட்டத்தை  சீர் அமைக்க,  நற்குல  திராட்சை  கொடியை  கொண்டுவந்து  ஒட்டு வைத்தான். பூமியில் வேர் உள்ள திராட்சை  கொடி அடி காம்பில்  நற்குல திராட்சை துளிர் கொடி ஒட்டு  வைக்கப்பட்டது.  

(யோவான்  151}  10)
இப்போது  தோட்டக்காரன் காட்டு செடியை  ஒட்டு வைத்தது மூலம் நானே நல்ல திராட்சை செடி அதன் வேர்  இறைவன்,  கொடி துளிர்  மனிதன்  இப்போது செடி நல்ல  திராட்சை  நற்குல திராட்சை  பழம் தந்து... 

கொடி இறைவனும் பதியம்,  ஒட்டுவைக்கப்பட்டதால்  மனிதன்  இறைவனின் மகன் மகள்  ஆனான். இறைவனோடு  இணைந்திருப்பதால்  நல்ல கனிகளை குடிப்பதற்கு தகுதியான  மனம் , குணம்,  ருசி,  சக்தி தரும்  ரசம் தருகிற கடவுளின்  பிள்ளையாகிறான்.

கொடியாகிய  நாம் இறைவனோடு  இணைந்து  நல்ல  கனி  கொடுப்போம் இறையருள்  நம்மோடு.

-முனைவர். தே.பால்பிரேம்குமார்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT