வெள்ளிமணி

குலதெய்வ மகிமை!

25th Mar 2022 04:12 PM

ADVERTISEMENT

 

நம்முடைய ஈடு இணையற்ற இந்து மதத்தில் ஆயிரம் தெய்வங்கள் உள்ளன. அதில் ஒருதெய்வம் நம்முடைய மூதாதையர் யாராவது ஒருவருடைய கனவிலோ அல்லது அருள்வாக்கின் மூலமாகவோ வந்து "நான் இந்த ஊரில் இருக்கிறேன் என்னை உன் குலதெய்வமாக வைத்துக்கொள் உன் குடும்பத்தை மட்டுமல்ல; உன்குலத்தையே காக்கிறேன்' என்று கையடித்து சத்திய வாக்கு கொடுத்திருக்கும்.  ஆகையால் அதை குலதெய்வம்  ஆக கொண்டு வழி வழியாக பூஜித்து வருகின்றனர்.

ஆனால் சிலர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று  குலதெய்வத்தை விட்டு விட்டு வேறு எங்கெல்லாமோ செல்கின்றனர். ஆனால் அந்த தெய்வம் குலதெய்வத்திடம் உத்திரவு கேட்கும். 

ஆகையால் ஒன்றைத் தெரிந்து கொள் - ஒன்றையேநம்பு - ஒன்றையே நிணை } ஒன்றாகிவிடு - ஒன்றில் எல்லாவற்றையும் பார் எல்லாவற்றிலும் அந்த ஒன்றையே பார்  ஒன்றாக காண்பதே காட்சி அந்த ஒன்றுதான் ஸ்ரீகுலதெய்வம்.

ADVERTISEMENT

வீட்டில் பூஜையறையில் குலதெய்வபடத்தை நடுவில் வைத்து கோலமாவில் குலதெய்வம் பெயரை எழுதி  நம்வீட்டில் ஓருவர் இருப்பதைப்போலவே பாவித்து நாம் சாப்பிடும் அனைத்தையும் படைத்து சாப்பிடவும். 

குலதெய்வத்திடம் வாய்விட்டு பேசவும். அவனிடம் குறையைச்சொல்லி அழவும்.. அவர் பெயரை எப்போதும் கூறவும்.. நோட்டில் அவர் நாமத்தை எழுதவும் உரு ஏற்றவும்.  அவனையே நவகிரகமாக பாவித்து அவர் படத்தையும் விளக்கையும் நடுவில் வைத்து ஓன்பது பிரதட்சிணம் செய்து நமஸ்கரிக்கவும்.

தினமும் அவருடைய அஷ்டோத்திரம் முடிந்தபோது சகஸ்ரநாம பூஜை செய்யவும். பிரதி வருடம் தவறாமல் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதலை செலுத்தவும். மனதை ஒருமுகமாக்கி குலதெய்வத்தின் மேலேயே சிந்தனையை செலுத்தி வந்தால், நமக்குள் ஒரு தெய்வீக ஓளி தோன்றி தெய்வீக சக்தி பிறக்கும்.

அதற்கு முன் எந்த கிரகங்களும் எந்த திருஷ்டி போன்ற தோஷங்களும் வேலை செய்யாது. இது அனுபவபூர்வமான உண்மை  குலதெய்வத்திடம் பரிபூரண சரணாகதி அடைந்தால் குவலயம் எங்கும் குதூகலம்தான். இது சாதாரண வார்த்தையல்ல சத்தியமான வார்த்தை.  இதை எத்தனையோ குடும்பங்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் ஆனந்தமாக இருக்கின்றனர். ஆகையால் யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்காக அடியேனுடைய ஸ்ரீகுலதெய்வம் ஸ்ரீமதுரகாளியம்மன் அருளால் இதை பதிவு செய்கிறேன்.

- மதுரகாளிதாசன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT