வெள்ளிமணி

உள்ளத் தெளிவில்  உள்ளது மகிழ்ச்சி!

25th Mar 2022 03:34 PM

ADVERTISEMENT

 

மூசா நபி  என் இறைவனே!  என்  உள்ளத்தைத் திடப்படுத்தி  விசாலமாக்கி வைப்பாயாக  என்று வேண்டியதை  விளம்புகிறது.  விழுமிய குர் ஆனின்  20}25 ஆவது  வசனம்.

மூசா நபி  முறையிட்டபடி  துணிவோடு  விரிவாகும்  உள்ளத் தெளிவு  எடுத்த செயலை  வெற்றியோடு  முடித்து  வைக்கும்.  மகிழ்ச்சி மலரும்.

94}1  ஆவது  வசனத்தில்  இறுதி தூதர்  முஹம்மது  நபி ( ஸல்) அவர்களிடம் இறைவன்  உங்களின்  உள்ளத்தை  நாம் விசாலமாக்கி  வைக்கவில்லையா? என்று  கேட்டதைக் காண்கிறோம். நபி (ஸல்) அவர்களின்  நல்ல உள்ளத்தை ஒளிமயமாக்கி  வரவேற்புக்கு  உரியதாகவும்  தெளிவு  நிறைந்ததாகவும் வைத்திருந்ததாக தப் சீர் இப்னு கதீர்  விளக்குகிறது.

ADVERTISEMENT

உள்ளம்  தெளிவாக இருப்பது  இறைவனின்  பெரும் அருள் கொடை. தெளிவான  விசாலமான  உள்ளம் அமைதியானது.  அதில் நிம்மதி நிலவும். அந்த உள்ளம் திருப்தியில்  திளைக்கும். நற்செயல்களில்  நாட்டம்  கொள்ளும்.

வாழ்க்கை  சுறுசுறுப்புடன்  இயல்பாக  இயங்கும்.  முன்னேற்றத்தில் முழுமூச்சாக  ஈடுபடும்.  சாதிக்கும்  வாய்ப்புகளை  வாகாய்  பயன்படுத்தி வாகை சூடும். வளமான  வாழ்வு அமையும்.
அல்லாஹ்விற்குப்  பயந்து நடந்திடுங்கள்.  இதனால் நீங்கள்  வெற்றி அடையலாம்  என்று   அறிவிக்கிறது2}189 ஆவது  வசனம்.

அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்தால்  உள்ளம் தெளிவடையும். நல்ல ன செய்யும். அல்லாஹ்வும் வெற்றியை  நல்குவான். வெற்றியில்  மகிழ்ச்சி  மலரும்.

ஏக  இறை கொள்கையை  ஏற்றவர்களின் உள்ளத்தை  இறைவன்  விசாலமாக்கி ஒளிர செய்கிறான்  என்று செப்புகிறது 39} 22 ஆவது வசனம். ஏக  இறைவனை ஏற்ற அடியானின்  பார்வை பளிச்சிடுகிறது.  அதனால்  அல்லாஹ் அருளும் நன்மையிலும் சிறப்பிலும்  உள்ள தெளிவுடன் உறுதியாக உள்ளான்.  வணக்க வழிபாடுகளின்  பேணுதவோடு ஈடுபடுகிறான்.  நானும்  செயல்களை  நாடாது நகர்கிறான்.

மனிதர்களே  உங்கள்  இறைவனிடமிருந்து  நிச்சயமாக  ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது.

உங்களின்  உள்ளங்களில்  உள்ள  நோய்களைக் குணப்படுத்தும். நம்பினோருக்கு நேர் வழிகாட்டும் என்று கூறுகிறது 10}57 ஆவது  வசனம். உங்களின்  இறைவன்  இயம்பும்  அறிவுரைகள்  உள்ளங்களில்  அழுக்கு, அழுக்காறு,  கசடுகளை  அகற்றி  உள்ளத்தைத் தெளிவாக்கும். தெளிவான உள்ளம்  அல்லாஹ்வின்  அருளில்  மகிழ்ச்சி  கொள்ளும்.

அன்றாட  நிகழ்வுகளை  அல்லாஹ்  கவனிக்கிறான் என்ற  உணர்வு உண்டானால்  தெளிவுறும்  உள்ளம் திகைக்காது மிகைக்காது  பகைக்காது தகையுடனே  தக்கன செய்யும்.  தயாளன் அல்லாஹ்வின்  அருளைப்  பெற்று மகிழும்.

-மு.அ. அபுல்  அமீன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT