வெள்ளிமணி

மகர ராசிக்காரர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: வாரப் பலன்கள்

24th Jun 2022 05:32 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நினைத்ததை நிறைவேற்றுவீர்.  விவாதங்களில் ஈடுபடாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்.  சக ஊழியர்களின் ஆதரவோடு   வேலையை முடித்து, நற்பெயர் பெறுவீர்கள்.

ஆடம்பரப் பொருள்களால் வருவாய் ஈட்டி லாபம் சம்பாதிப்பீர்கள்.  கடன் சுமை ஏறாமல் பார்த்துகொள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர் வரத்து மிகுதியால் மகசூல் பெருகி, லாபம் ஈட்டுவார்கள்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகளுக்கு காரியங்கள் சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு வரவு மிகுதியாகும். பெண்களுக்கு நெருக்கடியும், பிரச்னைகளும் குறையும். மாணவர்கள் பலத்தையும், பலவீனத்தையும் அறிவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பிரிந்து சென்றவர்களைப் பற்றி நினைவுகள் சோர்வை ஏற்படுத்தும். தற்பெருமை சார்ந்த  எண்ணங்களைக் குறைத்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு குறையும்.

வியாபாரிகள் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.  வித்தியாசமான சிந்தைகளால் விவசாயிகளிடம் மாற்றம் ஏற்படும்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத பயணங்களால் மாற்றம் உண்டாகும்.

கலைத்துறையினர் விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சுமுகமான சூழல் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மௌனம் சாதிப்பது நல்லது.

சிக்கனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.  உத்தியோக மாற்றம் உண்டாகும்.  வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகள் எவரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினர் சூழ்நிலையை அறிந்து செயல்படவும். பெண்கள் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சில் நன்மை கிடைக்கும். மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அந்தஸ்து உயரும். புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். தர்ம சிந்தனைகளை வளர்ப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். புதிய கடன்களை வாங்கி, வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளின் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். புதிய தொண்டர்களை கட்சியில் சேர்ப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு உயர்வு கிடைக்கும். பெண்களுக்குத் தேவையற்ற குழப்பம் நிலவும்.  ஆன்மிகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் சாதிக்கும் அளவுக்கு யோகம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

அறிவும் துணிச்சலும் கூடும். தீவிர முயற்சியால் கடின செயல்களை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உண்டு.

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாக இருக்கும். அரசியல்வாதிகள்  அநாவசியமான வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.  மாணவர்கள்  விளையாட்டில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - இல்லை

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் சுபிட்சத்தை எட்டுவீர்கள். பழைய விவகாரங்களைச் சீர் செய்யும் நேரமிது. திட்டமிட்ட பணிகள் நடைபெறும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல அனு
கூலமான நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு இருந்துவந்த தடை நீங்கும்.

விவசாயிகள் கடன் பிரச்னைகளைச் சாதுர்யமாக முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. பெண்கள் சுற்றுலா செல்வர். மாணவர்களுக்கு முன்னேற்றத்துக்கான பாதை உண்டாகும்.

சந்திராஷ்டமம் - 24,25.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நீண்ட நாள் ஆசை நிவர்த்தியாகும்.  பிறருக்கு உதவும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்தும், திருடு போன பொருளும் திரும்ப வரும். குடும்பத்தில் அமைதி கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளின் எண்ணம் ஈடேறும். விவசாயிகள் பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகளின் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்கள் உறவினர்களை அனுசரித்து நடக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும்.

சந்திராஷ்டமம் - 26,27.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அனுகூலமான பயணம் ஏற்படும். பொருளாதாரத்தில் சுபிட்சங்கள் கூடும். சுப காரியங்கள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்களின் பிரச்னைகள் குறையும்.  மனக் கசப்பு நீங்கும். 
வியாபாரிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்.  அரசியல்வாதிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு இருக்கும்.

ரசிகர்களிடையே பாராட்டு பெறுவீர்கள். பெண்களின் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.  மற்றவர்களை அனுசரித்து நடக்கவும். மாணவர்கள் சீரிய முயற்சி செய்தால் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - 28, 29, 30.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  அலைச்சலும், சோர்வும் உண்டாகும். புகழ் உயரும்.  உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளை அனுசரித்து, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு,  விற்பனையைக் கையாளவும். விவசாயிகள் வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். கலைத்துறையினரின் கனவுகளும், திட்டங்களும் நிறைவேறும். பெண்கள் உறவினர்களிடம் மௌனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சிறு உடல் உபாதைகள் உண்டாகும். உறவினர்களால் தொந்தரவு கூடும். எதிலும் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலையைச் செய்வதில் தாமதம் ஏற்படும். 

வியாபாரிகள் உஷாராக இருப்பது நல்லது. விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகள் பாராமுகத்தைக் காட்டாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்குச் சக கலைஞர்களால் பாராட்டு கிடைக்கும்.  

பெண்கள் சலன புத்தியைத் தவிருங்கள். இல்லத்தில் அமைதி உண்டாகும்.  மாணவர்களுக்கு கணிதப் பாடங்களில் ஆற்றல் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தாமதப்பட்டிருந்த காரியங்கள் நடக்கும்.  சிறிய அளவுக்கு உடல் உபாதைகள் தோன்றும்.  பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்கர்களின் பணி கூடினாலும், ஊதியம் சிறப்பாக இருக்காது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  விவசாயிகளுக்குப் பொருளாதாரம் சீராகவே இருக்கும்.  

அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலால் கவலை கொள்வீர்கள்.  கலைத்துறையினருக்கு வெற்றி கிடைக்கும். பெண்கள் பிறரை அனுசரித்து நடக்கவும். மாணவர்கள் முன்னேற கடுமையாக உழைப்பீர்கள். ஆசிரியர்
களின் ஆதரவு உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பண வரவு இருந்தாலும், சிறு விரயங்கள் உண்டாகும். உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை கூடும். சிக்கனத்தைக் கையாண்டு சேமிப்பை கூட்டுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை மதித்து நடப்பீர்கள்.  வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிரயாணங்களில் கவனம் தேவை. 

விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பிரச்னைகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகவும்.

சந்திராஷ்டமம் - இல்லை

ADVERTISEMENT
ADVERTISEMENT