வெள்ளிமணி

நிகழ்வுகள்

24th Jun 2022 06:09 PM

ADVERTISEMENT

 

புனர்வசு பூஜை
சென்னை குரோம்பேட்டை நேரு நகர் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள  ஸ்ரீ ரமணா ஆஸ்ரமத்தின் ரமணாலயத்தில் புனர்வசு பூஜை  (ஸ்ரீ ரமணரின்  ஜென்ம நட்சத்திர நாள்) ஜூன் 30}இல் (வியாழக்கிழமை)  நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று மாலை 5.30 மணி முதல் இரவு வரை வேத பாராயணம் ,   ஸ்ரீ ரமணா அஷ்டோத்ர பூஜை,  தமிழ்ப் பாராயணம், அக்ஷரமணமாலை, ரமண சத்குரு, தியானப்பாட்டு, ஆரத்தி  பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை
பெறுகின்றன.
 தொடர்புக்கு }9444261296.

கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகேயுள்ள 26 சேத்தூர் கிராமத்தில் உள்ள ஐம்பெருந்திருக்கோயில்களின் கும்பாபிஷேக விழா ஜூன் 26 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் 24}ஆம் தேதி தொடங்குகின்றன.

ஆனி திருமஞ்சனம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 49 கி.மீ. தொலைவில் உள்ள,  திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆவுடையார்கோவில் எனப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா ஜூன் 24}ஆம் தேதி தொடங்கி, ஜூலை 5}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 04371}233301.

ADVERTISEMENT

சிதம்பரம் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மாள் ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன மஹோத்ஸவ விழா ஜூன் 27}ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: ஜூலை 6} விசேஷ மஹாபிஷேகம்.

திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பாலூரை அடுத்த புதூர் பி.சி.பி. நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருவிழா ஜூன் 30}இல் (வியாழக்கிழமை)  இரவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT