வெள்ளிமணி

இந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள்...

22nd Jul 2022 05:54 PM

ADVERTISEMENT

 

சித்தர் பீடத்தில் சிறப்புப் பூஜைகள்
திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோயில் கிராமத்தில் உள்ள திருவடிலோகம் சித்தர் பீட வளாகத்தில் ஜூலை 28}ஆம் தேதி ஆடி அமாவாசை பூஜையும்,  ஜூலை 31}இல்   வாலை கன்னிக்கு சிறப்புப் பூஜையும் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு:  9488031433. 

பிதுர்பூஜை சிறப்பு வழிபாடு
தஞ்சை மாவட்டம்} திருவையாறு வட்டம், திருப்பூந்துருத்தி கிராமத்தில் உள்ள அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத  ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஜூலை 28}இல்  ஆடி அமாவாசையன்று சிறப்பு பூஜை, ஹோமம் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: 9894401250.

அப்பர் கயிலை காட்சி விழா
திருவையாறு திருத்தலத்தில் அப்பர் கயிலை காட்சி விழா ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோயிலில் உள்ள தென்கயிலாயம் சந்நிதியில் ஜூலை 28}ஆம் தேதி இரவு 9 மணி அளவில் நடைபெறும். ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர மஹோத்ஸவம் ஜூலை 23}இல் துவங்குகிறது.

ADVERTISEMENT

சந்தான ப்ராப்தி சிறப்பு அபிஷேகம்
திருவள்ளூர் அருகில் வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள அஷ்டசாஸ்தா கோயிலில் ஜூலை 24}இல் சந்தான பிராப்தி (மக்கட் பேறு வேண்டி) சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: 9444109431.

ஆடிக்கிருத்திகை விழா
செஞ்சி - மேல் ஒலக்கூர் கிராமத்தில் பசுமலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமண்ய ஸ்வாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா ஜூலை 23}இல் நடைபெறுகிறது. 
தொடர்புக்கு: 9003114240.

திருத்தணி அருகே பாக சாலையில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா ஜூலை 23}ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆடித்திருவிழா
சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நகர் அருள்மிகு பவானி அம்மன் கோயிலில் ஜூலை 24}ஆம் தேதி ஆடித்திரு
விழாவை முன்னிட்டு பகல் 12 மணி அளவில் கூழ்வார்த்தலும் ஸ்ரீ பவானி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

சென்னை லட்சுமிபுரம் பாரதியார் தெருவில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் 37}ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா ஜூலை 22}இல் நடைபெறுகிறது. 

கும்பாபிஷேகம்
சென்னை காமராஜர் நகர் புத்தகரத்தில் உள்ள இலட்சுமிபுரத்தில் அருள்மிகு ஸ்ரீநாகாத்தம்மன் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி சமேத சர்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 22}ஆம் தேதி காலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. பின்னர், 24}ஆம் தேதி தீச்சட்டி ஏந்துதல், தீமிதி திருவிழா, கூழ்வார்த்தல் நடைபெறுகின்றன.

லட்சார்ச்சனை பெருவிழா
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் காக்கையாடி வீரபார்த்திப சித்தரால் பூஜிக்கப்பட்ட  ஸ்ரீ ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை பெருவிழா ஜூலை 22}இல் நடைபெறுகிறது. ஜூலை 23} ஆடி கிருத்திகை விழா; 24} விடையாற்றி உத்ஸவம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT