வெள்ளிமணி

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

1st Jul 2022 03:10 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். இலக்குகளை நிர்ணயித்து உழைப்பீர்கள்.  கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். பேச்சிலும் கண்ணியம் கூடும்.

உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரிகள் லாபத்தைப் பார்ப்பார்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் வருவாய் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைக்கு அடிபணிவார்கள்.

ADVERTISEMENT

கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.

பெண்மணிகளின் பொருளாதாரத்தில் படிப்படியான உயர்வு உண்டு.  மாணவர்களின் ஆளுமை உயரும்.
சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். மன வளம், உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வெற்றி பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள்.

கலைத்துறையினரின் நெடுநாளைய எண்ணம் பூர்த்தியாகும். பெண்கள் குடும்ப அமைதியைப் பேணுவார்கள். மாணவர்கள் அனுசரித்து  நடப்பர்.
சந்திராஷ்டமம் - இல்லை

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் ஏற்றம் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உண்டாகும் கைநழுவிய வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரிகள் கூட்டாளிகளின்ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள். விவசாயிகள் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் திறமைகளைத் தூண்டுவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவர். பெண்களுக்கு மருத்துவச் செலவு ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர்.

சந்திராஷ்டமம் - இல்லை

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எதிர்பாராத வருவாய் கிடைக்கும். வழக்குகளில் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். குடும்பத்தாரிடம் பாசம் அதிகரிக்கும்.  சுற்றுலா செல்வார்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் செயல்முறைகளை மாற்றிக் கொள்வீர்.

கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும். பெண்களுக்குப் பெரியோரின் ஆசி கிடைக்கும். மாணவர்கள் புதிய படிப்பில் சேருவர்.

சந்திராஷ்டமம் - இல்லை

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

கடினமான விஷயங்களையும் சுலபமாக முடிப்பீர்கள்.  பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தாரிடம் கலகலப்பாகப் பழகுவீர்கள். பதவிகள் கிடைக்கும்.  புதிய அனுபவம் பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்குத் தவறிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பிறரிடமிருந்த மனக்கசப்பு நீங்கும். கலைத் துறையினருக்குப் புதிய நண்பர்கள் கிடைப்பர்.  பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர்.

சந்திராஷ்டமம் - இல்லை

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சாதுர்யமான பேச்சால் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.  குழந்தைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வருவாய் கூடும். தன்னம்பிக்கையும் தனித்தன்மையும் வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் பொறுமையுடன் நடந்து, விற்பனையைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவர்.  அரசியல்வாதிகள் பயணங்களால் புகழடைவார்கள்.

கலைத்துறையினர் கலைநுணுக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள்.  பெண்கள் சுற்றுலா செல்வீர். மாணவர்கள் பொறுப்புடன் நடப்பர்.
சந்திராஷ்டமம் - இல்லை

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தாருடன் உற்சாகமாய் பொழுதைக் கழிப்பீர்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளில் பலன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாய் முடிவடையும்.

உத்தியோகஸ்தர்கள் மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவர். வியாபாரிகள் கூட்டாளின் பேச்சை கேட்டு நடப்பர்.  விவசாயிகளுக்கு லாபம் கூடும்.

அரசியல்வாதிகளோ தொண்டர்கள் முன்னேற்றம் அடைய விரும்புவர்.  கலைத்துறையினர் விருப்பம் நிறைவேறும்.  பெண்களுக்கு ஆன்மிகத்தில் கவனம் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவர்.
சந்திராஷ்டமம் - இல்லை

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அரசிடமிருந்து சலுகைகள் கிடைக்கும். மனதில் இருந்த  கவலைகள் நீங்கி, புத்துணர்வு உண்டாகும்.   எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

புதிய மாற்றம் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.  விவசாயிகளின் உழைப்புக்கேற்ற பலன் உண்டு.  அரசியல்வாதிகள் மேலிடத்தால் பாராட்டப்படுவர்.

கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் யோகா, தியானத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.  மாணவர்கள் பிறரால் பாராட்டப்படுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நெடுநாள் ஒத்திவைத்திருந்த வேலைகளைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகலும்.  பழைய கடன்களை அடைப்பீர்கள். பயணங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்துகொள்வர். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி, விற்பனை செய்வர்.  விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவர்.

அரசியல்வாதிகளின் நெருக்கடியான சூழ்நிலை மறையும். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவி செய்வர். பெண்களுக்குப் பாராட்டுதல் கிடைக்கும். மாணவர்கள் சாதனைகள் செய்வர்.
சந்திராஷ்டமம் - 1,2.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சியான சிந்தனைகளால் சோர்வு நீங்கும். நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் உண்டாகும்.  உடன்பிறந்தோரிடம் கருத்துவேறுபாடுகள் மறையும்.  

வீண் செலவு இருக்காது.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பணிவுடன் 
நடப்பர்.  வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகளின் பொருளாதார நிலை உயர்வாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் ஒற்றுமையாகப் பழகுவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவர்.

சந்திராஷ்டமம் - 3,4,5.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சகிப்புத் தன்மை கூடும். வருவாய் சிறக்கும். கடன்களை அடைப்பீர்கள். வேகமும், விவேகமும் கூடும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கணிசமான வருவாயை காண்பார்கள். விவசாயிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறக்கும்.  விவசாயிகளுக்கு வருவாய் கூடும்.

அரசியல்வாதிகள் சமயோஜித புத்தியால் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு உண்டாகும்.

பெண்கள் குடும்ப முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - 6,7

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சுப காரியங்கள் நடக்கும்.  சுமுகமான பாகப் பிரிவினை நடக்கும்.  உடன்
பிறந்தோர் இணக்கமாகப் பழகுவார்கள். புதிய  அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் சுலபமான விஷயங்களைப் புரிந்துகொள்வார்கள். விவசாயிகள் புதிய அனுபவத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் சரியான நேரத்தில் உரங்களைப் பயன்படுத்துவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு பயணம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு ரசிகர்களின் முழு ஆதரவு உண்டு.  பெண்களுக்கு மருத்துவச் செலவு குறையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர்.

சந்திராஷ்டமம் - இல்லை. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT