வெள்ளிமணி

நிகழ்வுகள்

1st Jul 2022 03:48 PM

ADVERTISEMENT


ஜேஷ்டாபிஷேக உத்ஸவம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மலையடிப்பட்டி ஸ்ரீகமலவல்லி சமேத ஸ்ரீகண்நிறைந்த பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேக உத்ஸவம், திருப்பாவாடை உத்ஸவம் ஜூலை 11}இல் (திங்கள்கிழமை)  நடைபெறுகின்றன.  தொடர்புக்கு  - 9361179673.

கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கூறத்தாங்குடியில்  குங்குமவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ எமஸம்ஹாரேஸ்வரர் கோயிலிலும்,  லட்சுமி நாராயணப் பெருமாள் அருமருந்து ஆஞ்சநேயர் கோயிலிலும் மகா கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷண வைபவங்கள் ஜூலை 6-இல் நடைபெறுகின்றன. 

தொடர்புக்கு: 9600139434, 9840053289.

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் உள்ள பாடல் பெற்ற  தேவாரத் திருத்தலமான  திரிபுர சுந்தரி உடனமர் திரிபுராந்தக சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூலை 6 காலை 6}7.30 க்குள் நடைபெறுகிறது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஜூலை 6}ஆம் தேதி காலை 6.45 மணிக்கு நடைபெறுகிறது.

திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்குப்பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி,  ஜூலை 6}இல் திருக்குட முழுக்குடன் நிறைவுறுகின்றது. 
தொடர்புக்கு: 0431 } 2761869.

தேர்த் திருவிழா
இஸ்கான் சென்னை சார்பில் ஸ்ரீ ஜகந்நாதரின் 39-ஆவது தேர்த்திருவிழா ஜூலை 3}இல் நடைபெறுகின்றது.   அன்று மாலை 3 மணி அளவில் அண்ணா நகர் 3}ஆவது அவென்யூவிலிருந்து புறப்பட்டு, மாலை 7 மணி அளவில் பாடி மேம்பாலம் அருகில் உள்ள திருமால் திருமகள் வசந்த மண்டபத்தை அடைகின்றது. 

தொடர்புக்கு: 044 - 24530921/23.

மாணிக்கவாசகர் குரு பூஜை
சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஆத்ம நாதர் பர்ணசாலை (கோயில்)யில் மாணிக்கவாசகர் குரு பூஜை ஜூலை 3-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவாசகம் முற்றோதல், அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும். 
தொடர்புக்கு: 9443112098.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையத்தில் ஜூலை 3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு. 
தொடர்புக்கு:  9444887769.

உழவாரப்பணி
சென்னை அண்ணாமலையார் அறப்பணிக் குழு சார்பில் மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மருதாடு கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புன்னை கிராமத்தில் மண் மூடிய நிலையில் புதைந்துள்ள சிவன் கோயிலில் ஜூலை 3-இல் உழவாரப்பணி நடைபெறுகின்றது.  

தொடர்புக்கு -  9884577557. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT