வெள்ளிமணி

நிகழ்வுகள்

21st Jan 2022 03:03 PM

ADVERTISEMENT


வருஷாபிஷேகம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, திருவாரூர் மார்க்கத்தில், கீழ நாலாநல்லூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலய வருஷாபிஷேகம் (ஸம்வத்ஸராபிஷேகம்), அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் 27.01.2022 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கோயில் திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம். 
தொடர்புக்கு: மன்னை வை.ரகுநாதன் } 91769 12679.

கும்பாபிஷேகம்  
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம்,  குருவராஜபாளையம் வழி, பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 14.02.2022 திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கோயில் திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து எம்பெருமான் அருளைப்பெற வேண்டுகிறோம். 
தொடர்புக்கு: 86958 75868.

ADVERTISEMENT
ADVERTISEMENT