வெள்ளிமணி

பொன்மொழிகள்!

21st Jan 2022 01:34 PM

ADVERTISEMENT
எங்களுடைய தெய்வம் ஒன்றாகவும், உங்களுடைய தெய்வம் ஒன்றாகவும்  ஆக மொத்தம் இரண்டு தெய்வங்கள் இருக்குமோ? இருக்காது.
-சிவ வாக்கியர் 

உலகில் போகங்கள் தரும் அழியும் இன்பம் வறண்டுபோய் முடிவடையும். பரமாத்மா தரும் அழியாத இன்பமோ, முடிவு பெறாத சுவையுடன் வளர்ந்துகொண்டே இருக்கும்.
-சுவாமி ராம்சுக்தாஸ்

மனதில் சற்றும் ஈவு இரக்கமின்றி கொடியவர்கள் சிலர், பிற உயிர்களைக் கொல்லத் தொடங்கும் போதெல்லாம் நான் பயந்தேன்.
-வள்ளலார்

இளமையில் உழைத்தவன், முதுமையில் வளமாக வாழ்வான். உழைப்பால் உயர்ந்தவனை உலகமே வணங்கிப் போற்றும்.
-ராமகீதை (ஸ்ரீராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை).

ADVERTISEMENT

நண்பன், தன்னை நம்பியவன், அன்னம் இட்டவன், தங்க இடம் கொடுத்தவன் ஆகியவர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.
-வியாச பாரதம், வன பருவம் (யுதிஷ்டிரர் கூறியது).

பெருஞ் செல்வம், அறிவு, அதிகாரம் ஆகியவற்றை அடைந்தபோதிலும் அடக்கத்தோடு இருப்பவர்கள் விவேகிகள் ஆவார்கள்.
-விதுரநீதி

களவு வேண்டாம், கொலை வேண்டாம், பொய் சொல்ல வேண்டாம், கோபம் வேண்டாம், பிறரிடம் அருவருப்பு கொள்ள வேண்டாம், தற்புகழ்ச்சி வேண்டாம், மற்றவர்களைத் திட்ட வேண்டாம்  இதுதான் அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆகும். இதுவே சிவபெருமான் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு உரிய வழியாகும்.
-பசவண்ணர் (கர்நாடக மாநிலம்)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அது போன்று நல்லொழுக்கம் உடையவர்கள் வறுமை வந்த காலத்திலும் தீய செயல் செய்ய விரும்பமாட்டார்கள்.
-குமரகுருபரர்

இந்த உலகத்தில் தானத்தைப் போன்ற செல்வம் வேறு இல்லை; திருப்தியைப் போன்ற சுகம் வேறு இல்லை; ஒழுக்கத்தைப் போன்ற ஆபரணம் வேறு இல்லை; ஆரோக்கியத்தைப் போன்ற லாபம் வேறு இல்லை.
-பஞ்சதந்திரம்

சத்தியம் பூமியை தாங்குகிறது; சத்தியத்தால் சூரியன் ஒளி வீசுகிறான்; சத்தியத்தால் காற்று வீசுகிறது; எல்லாமே சத்தியத்தால்தான் நிலைபெற்றிருக்கிறது.
-சாணக்கிய நீதி

ஸ்ரீ ராமச்சந்திரா! நான் மாயை நிறைந்த இந்த சம்சாரம் என்ற சுழலில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் இருக்கும் என்னை, நீ எப்படித்தான் காப்பாற்றப் போகிறாயோ? எனக்குத் தெரியவில்லை.
-மகான் தியாகராஜர்

உயர்ந்த கல்வியை கற்றுணர்ந்து அடக்கத்துடன் வாழ்வது அறிஞர்களுக்கு அழகு சேர்க்கும்.
-நறுந்தொகை }14.

முற்பிறவியின் கர்மவினைப்பயன் நம் யாரையும் விட்டுவிடுவதில்லை; இது பிரம்மதேவன் வகுத்த சட்டம்.
-வியாதகீதை

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT
ADVERTISEMENT