வெள்ளிமணி

நினைத்த காரியங்கள் கைகூடும் இந்த ராசிக்கு (வாரப் பலன்கள்)

DIN

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்த இந்த (ஜனவரி 7 - 13)ஆம் தேதி வரையிலான வாரப் பலன்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும் நேரமிது. பொருளாதாரத்தில் சிறிது ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டாகும். செய்தொழில் மேலும் விருத்தியடையும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அலுவலக வேலைகளைத் திறம்பட முடிக்கப் பயிற்சி மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து பணப் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிறிது நஷ்டம் உண்டாகலாம். விவசாயிகள் சிறிய முதலீட்டில் நிலங்களை வாங்குவீர்கள். சந்தையில் உங்கள் விளைபொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினரின் கனவுகளும், திட்டங்களும் மெய்ப்படும் நேரமிது. செல்வாக்கு உயரும். 

பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மாணவமணிகள் யோகா, பிராணாயாமம் செய்து மனதை ஒருநிலைப் படுத்துவீர்கள். விளையாட்டுகளின்போது காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 08. 

சந்திராஷ்டமம்: இல்லை.

••••••

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

நன்மைகள் அதிகரிக்கும் நேரமிது. உங்களை விரோதியாக நினைத்தவர்கள் கூட நட்பு பாராட்டத் தொடங்குவார்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் தடுமாற்றம் இல்லாமல் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு வர சற்று தாமதமாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் பன்மடங்கு பெருகும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுக்க வாய்ப்பு உருவாகும். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். எவரையும் பகைத்துக் கொள்ளும் வகையில் பேச வேண்டாம். கலைத்துறையினர் ரசிகர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். போட்டி பொறாமைகள் குறையும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வீண் யோசனைகள் உங்கள் மன வலிமையைக் குறைக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 09. 

சந்திராஷ்டமம்: இல்லை.

••••••

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)


உங்கள் கெளரவம், அந்தஸ்து உயரும் நேரமிது. செய்தொழிலில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சாதுர்யமாகச் செயலாற்றி வெற்றி அடைவீர்கள். இடையூறுகள் நீங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நஷ்டங்களைத் தவிர்ப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். விவசாயிகள் புதிய வகை தானிய உற்பத்தியில் கவனம் செலுத்துவீர்கள். நீர்ப்பாசன  வசதிக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். அவசரப்பட்டு வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். முக்கியமான நேரத்தில் அநாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். 

பெண்மணிகள் நினைத்த காரியங்கள் ஈடேறும். பொறுப்புடன் செயல்பட்டு குடும்பத்தினரிடம் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவமணிகள் கடுமையாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சிவன், பார்வதியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

••••••

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

படிப்படியான முன்னேற்றம் உருவாகும் நேரமிது. உங்கள் முயற்சிகளில் ஏற்பட்ட தடங்கல்கள் விலகும். உங்களை அலைக்கழித்தவர்கள் தாங்களாகவே வந்து உதவி செய்வார்கள். பொருளாதார நிலை சீராகும். 

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களின் சிறு தவறுகளைப் பெரிது படுத்த மாட்டீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் சிறு தவறுகளால் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். தடைகளும், எதிர்ப்புகளும் நீங்கும். விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். தானிய உற்பத்தியில் நல்ல பலனை அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை உயரும். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளவும். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களைச் செய்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தனித் திறமையினால் உங்கள் மதிப்பு உயரும். பெண்மணிகள் பதற்றப்படாமல் நிதானத்துடன் காரியங்களைச் செய்வீர்கள். மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளப் பழகுவீர்கள். 

மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 08, 09. 

சந்திராஷ்டமம்: 07.

••••••

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் நேரமிது. அந்தஸ்து உடையவர்களிடம் மிக கவனமாக பழகுங்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். சிறிய முயற்சிகளால் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். சக ஊழியர்கள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் சாதுர்யமாக செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்க முயற்சிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளாலும் வருமானம் கூடும். புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் உறுதியான மனதுடன் ஈடுபடுவீர்கள். சோர்வில்லாத கடின உழைப்பால் தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு பணவரவு சீராக இருக்கும். சக கலைஞர்களுக்கு உதவி புரிவீர்கள். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை நிகழும். மாணவமணிகளுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். எதிர்காலத்திற்காக எடுக்கும் பயிற்சிகள் நல்ல பலனைத் தரும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: 08, 09.

••••••

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது. மலைப்பாக இருந்த செயல்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் பணிகளை நன்கு திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். கூட்டாளிகளிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகள் மகசூலில் ஓரளவு லாபத்தைக் காண்பீர்கள். புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகள் தங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் திட்டமிட்ட பிறகே தொடங்குவீர்கள். மேலிடத்திடம் இணக்கமான உறவு தொடரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வீர்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள். 

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 13. 

சந்திராஷ்டமம்: 10, 11, 12.

••••••

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் அந்தஸ்து உயரும் நேரமிது. உடல் ஆரோக்கியமும் வலுப்படும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். தடைகள் நீங்கும்.  

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் தானிய விற்பனையில் அதிக லாபம் காண்பீர்கள். நீர்வரத்துக்கான பணிகள் வெற்றிகரமாக முடியும். 

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகள் மூலம் புதிய கௌரவம், அந்தஸ்து கிடைக்கப் பெறுவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். 

பெண்மணிகள் கணவர் வீட்டாருடன் பரஸ்பரம் அன்பு பாராட்டுங்கள். கோபத்தைத் தூக்கி எறியுங்கள். மாணவமணிகள் உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்து வரவும். படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

பரிகாரம்: மகான்களின் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 08, 11. 

சந்திராஷ்டமம்: 13.

••••••

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் ஓரளவு மேம்படும் நேரமிது. செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். எவருடனும் அளவுடன் பேசிப் பழகவும். செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகள் மறைமுக எதிர்ப்புகளைச் சமாளித்து வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தானிய உற்பத்தி சிறப்பாக இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவையும், பாராட்டையும் பெறுவீர்கள். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள். 

பெண்மணிகள் குழந்தைகளின் மேற்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதிக மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: "கந்த சஷ்டி கவசம்' பாராயணம் செய்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 09, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

••••••

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும் நேரமிது. உங்கள் செயல்களில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் நீங்கும். குடும்பத்தினரை அரவணைத்துச் செல்வீர்கள். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். இறைவழிபாடு அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறுவீர்கள். உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ளவும். வியாபாரிகள் தொழிலை விரிவு படுத்துவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். எதிர்பாராத பண வரவால் கடன்கள் தீரும். 

அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு திறமை பளிச்சிடும். சக கலைஞர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையுடன் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்தரம் உயரும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். மாணவமணிகள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும். விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை.


••••••

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும் நேரமிது. ஆன்மிகம், தத்துவம், இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் மேலோங்கும். சகோதர, சகோதரிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்காதீர்கள். ரகசிய கோப்புகளைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளிடம் மூத்த வியாபாரிகள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். உங்கள் வியாபாரம் விருத்தியடைய இது உதவும். விவசாயிகளுக்கு புதிய சந்தைகளில் லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளித்து முன்னேறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். நலிந்த 
கலைஞர்களுக்கும் உதவுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சேமிப்புக்கு வழிவகை செய்வீர்கள். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெற அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள். உடற்பயிற்சியிலும் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 09, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

••••••

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் கூடும் நேரமிது.பெரியோர்களைத் தேடிச்சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அனைவரையும் மதித்து அன்பு காட்டுவீர்கள். 
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப 
சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி பெருகும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். பராமரிப்புச் செலவும் அதிகமாகும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். வார்த்தைகளை அளந்து பேசவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் மூலம் உற்சாகம் அடைவீர்கள். உங்கள் தனித் திறமையால் கெüரவம், புகழ் உயரும். 

பெண்மணிகள் குடும்பத்தினருடன் வீண் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை சிந்தனைகள் உயரும். படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 08, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

••••••

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும் நேரமிது. அரசாங்க வழித் தொடர்புகளால் ஆதாயங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் 
ஏற்படும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மனதிலிருக்கும் அதிருப்திகளை மேலதிகாரிகளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அனுசரணையாக நடந்து அனைவரது பாராட்டையும் பெற முயலுங்கள். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை. கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நல்லபடியாக இருக்கும். சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். திட்டமிட்டுச் செயலாற்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வீர்கள். சக கலைஞர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

பெண்மணிகளுக்கு உற்றார் உறவினர்களிடம் பாசம் மேலோங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர் உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். 

பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 12, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT