வெள்ளிமணி

புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு: வார ராசிபலன்கள்

30th Dec 2022 04:01 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களது அறிவும் ஆற்றலும் மிளிரும்.  தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வீட்டுக்குப் பராமரிப்புச் செலவை செய்ய நேரிடும்.  சிலருக்கு நோய்கள் நீங்கிவிடும். உத்தியோகஸ்தர்கள்  வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படாது.  விவசாயிகள் பயிர் விளைச்சலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.  அரசியல்வாதிகள் தங்களது செயல்களுக்கு புதிய அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.

ADVERTISEMENT

கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் பிறரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குழப்பங்கள் நீங்கும்.  திட்டமிட்டு உழைத்து முன்னேறுவீர்கள்.  உடனிருப்போர் ஆதரவாக இருப்பார்கள்.  சிலர் புதிய வீடுகளை வாங்குவார்கள்.

பெற்றோருடன் இணக்கம் தொடரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணம் மேற்கொள்வர்.  வியாபாரிகளுக்கு பிரச்னைகள் குறையும்.

விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.  அரசியல்வாதிகள் தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள்.

கலைத்துறையினருக்கு பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் தெய்வ வழிபாடு மேற்கொள்வார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 (மேஷம் - கன்னி)

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

ஆரோக்கியமும், மன வளமும் மேம்படும். செயல்களை நிர்வகிக்கும் ஆற்றலும் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். சிலருக்கு  அரசு உதவிகள் கிடைக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் கூடுதலாகப் பணிபுரிய வேண்டிவரும். வியாபாரிகளுக்கு வரவு உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் முன்னேற சோம்பேறித்தனம் பட மாட்டார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். தொழிலை உயர்நிலைக்குக் கொண்டு செல்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் வேறு பணிகளில் ஈடுபடமாட்டார்கள் . வியாபாரிகளின் கடன்கள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களைத் தட்டிக் கொடுப்பார்கள்.

கலைத்துறையினருக்கு கைவிட்டுபோன ஒப்பந்தம் கிடைக்கும். பெண்களுக்கு  குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் -  இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய அணுகுமுறையைக் கடைபிடிப்பீர்கள்.  பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சீரான நிலையைக் காண்பார்கள்.  

விவசாயிகள் கால்நடைகளால் வருமானத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை அரவணைத்துச் செல்வீர்கள்.

கலைத்துறையினர் திட்டமிட்டு காரியமாற்றுவார்கள்.  பெண்கள் குதூகலத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} 30.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.  பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் வேலைகளைச் செய்வார்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும்.  அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக இருப்பார்கள். கலைத்துறையினர் தங்கள் காரியங்களில் முழு வீச்சில் இருப்பார்கள்.

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மாணவர்கள் இனிமையாகப் பழகுவார்கள்.

சந்சிராஷ்டமம் -  31,1,2.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.  அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.   நற்பெயரை எடுப்பீர்கள்.  போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகக் கடன் கிடைக்கும். வியாபாரிகள் கடையை அழகுபடுத்துவார்கள்.  விவசாயிகள் தங்களது பணியாளர்களைக் கௌரவமாக நடத்துவார்கள்.  

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பதவிகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் தங்களது பணிகளை விரைவாக செய்வார்கள். பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - 3,4.

படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 (துலாம் - மீனம்)

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் சில சௌகரியங்கள் கூடும். பொருளாதாரம் சீரடையும்.  நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். 

வியாபாரிகள் சிந்தித்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.  விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிக் கொடுப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு குறையத் தொடங்கும்.  கலைத்துறையினரின் பிரச்னைகள் குறையும்.  பெண்களின் உடல் ஆரோக்கியமும், மன வளமும் சீராகும். மாணவர்கள்  உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - 5.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உடல் நலமும், மன வளமும் மேம்பட யோகா, பிராணயாமம் கற்றுக் கொள்வீர்கள்.  உணவு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.  பழைய கடன்களும் வசூலாகும்.  தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் எதிர்ப்புகளைச் சமாளிப்பார்கள்.  வியாபாரிகள் கூட்டாளிகளால் புகழப்படுவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள்.  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

கலைத்துறையினர் போட்டிகளைச் சமாளிக்க நேரிடும். பெண்களுக்கு புகழ் அதிகரிக்கும். மாணவர்களுக்கு அறிவும் புத்தியும் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். பேச்சில் நிதானத்துடன் இருப்பீர்கள்.  தொழிலில் கண்ணும் கருத்துமாய் இருப்பீர்கள்.  உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல யோகம் உண்டு. 

வியாபாரிகள் சிறு ஆதாயம் பெற உழைக்க வேண்டியிருக்கும்.  விவசாயிகள் நன்மதிப்பைப் பெறுவார்கள்.  அரசியல்வாதிகள் வேலைகளைத் தள்ளிப் போட மாட்டார்கள்.

கலைத்துறையினருக்கு நன்மை அதிகரிக்கும். பெண்களுக்கு மருத்துவச் செலவு குறையும்.  மாணவர்கள் பாடங்களை நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணப் புழக்கம் இருக்கும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.  புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான முன்னேற்பாட்டில் இறங்குவார்கள். வியாபாரிகளுக்கு நெருக்கடிகள் தீரும்.  விவசாயிகள் உபகரணங்களை வாங்குவார்கள்.  

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்த மனத்தாங்கல் தீரும். கலைத்துறையினர் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்தால்  புத்துணர்ச்சியைப் பெறுவார்கள்.  மாணவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் -  இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தீயவர்களின் நட்பை தவிர்த்து விடுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உத்தியோகஸ்தர்கள் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். 

வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் நேரிடும். கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் கணவர், குழந்தைகளுடன் இணக்கமாகப் பழகுவார்கள். 

மாணவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT