வெள்ளிமணி

இந்த வார நிகழ்வுகள்

16th Dec 2022 06:09 PM

ADVERTISEMENT

 

அத்யயன உத்ஸவம்

சென்னை குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீவிஜயகணபதி ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அத்யயன உத்ஸவம் டிச 23}இல் தொடங்குகிறது. 

முக்கிய நிகழ்வுகள்: ஜன. 12} பகல் பத்து (திருமொழித் திருநாள்), ஜன. 2} வைகுண்ட ஏகாதசி தொடங்கி, அத்யயன உத்ஸவம் (இராப்பத்து), ஜன. 11} இரவு ஆழ்வார் திருவடி தொழுதல், ஜன. 12} இயற்பா, சாற்றுமறை. 

ADVERTISEMENT

ஸ்ரீஐயப்பா திருவிளக்குப் பூஜை

சென்னை-12 ஓட்டேரி ஸ்ரீஐயப்பா பக்த ஜன சபா ஆதரவில், 31-ஆவது ஆண்டு திருவிளக்குப் பூஜை, ஓட்டேரி அருள்மிகு ஸ்ரீசெல்லப் பிள்ளை ராயர் தேவஸ்தான சிறப்புப் பந்தலில் டிச. 16}இல் நடைபெறுகிறது. நிகழ்வுகள்: காலை 5 மணி} கணபதி பூஜை, 7 மணி} ஸ்ரீஐயப்பா பிரதிஷ்டை,  பகல் 12} அன்னதானம்,  இரவு 7} ஊர்வலம், இரவு 10} தாயம்பகா.

ஸ்ரீமகா பெரியவா ஆராதனை உத்ஸவம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி ஸ்ரீமகா பெரியவரின் 29}ஆவது வார்ஷிக ஆராதனை மகோத்ஸவம் டிச. 16 முதல் 21}ஆம் தேதி வரை சின்ன காஞ்சிபுரம் தேனம்பாக்கம் சிவஸ்தானத்தில் நடைபெறுகிறது. மேற்படி நாள்களில் ஸ்ரீமஹாருத்ர ஜபம், ருக்த கலச அபிஷேகம், ருத்ர ஹோமங்கள் நடைபெறும்.

டிச.20} ஆராதனை மகோத்ஸவம்.  மேலும், டிச. 19 முதல் 21 வரை சிவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத பிரும்மபுரீஸ்வரர் கோயில் வளாக திருக்குளத்தில் (பிரம்ம தீர்த்தம்) தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர பக்த சபா டிரஸ்ட் செய்துவருகிறது.

செங்கல்பட்டு ஆத்தூர் ஸ்ரீசதுர்வேத பாடசாலையில் ஸ்ரீமகா பெரியவா ஆராதனை உத்ஸவம் டிச. 20}இல் ஆவந்தி ஹோமம், அபிஷேகம், தீர்த்த நாராயண பூஜை, வீதியுலா போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றன.

நாம சங்கீர்த்தனம்

ஸ்ரீமகா பெரியவா ஆராதனை சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் தெருவில் உள்ள ஸ்ரீராம்ராம் சேவா சங்க வளாகத்தில் டிச. 18}ஆம் தேதி ஸ்ரீமதி காயத்ரி மகேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேரம்} மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

உழவாரப் பணி

அண்ணாமலையார் அறப்பணிக் குழுவின் சார்பில் டிச. 18}இல் சிதிலமடைந்த பழைமையான கோயிலான ஓசூர் சிவன் கோயிலில் உழவாரப் பணி நடைபெறுகிறது. மேல்மருவத்தூர்} மருதாடு வழியாக வந்தவாசி செல்லும் சாலையில் இந்தக் கிராமம் உள்ளது.தொடர்புக்கு} 94440 28929.

ஸ்ரீஹனுமன் ஜயந்தி மகோத்ஸவம்

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகே திருவோணமங்கலத்தில் உள்ள ஸங்கடஹர மங்கலமாருதி தேவஸ்தானத்தில் ஸ்ரீஹனுமன் ஜயந்தி மகோத்ஸவம் ஸ்ரீஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஆசாரிய ஸ்வாமிகளின் முன்னிலையில் பாகவத மேளாவாக டிச. 19 தொடங்கி, 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிச. 23- ஸ்ரீசீதாகல்யாண மகோத்ஸவம் உடையாளூர் கல்யாணராமன் பாகவதர் குழுவினரால் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT