வெள்ளிமணி

நிகழ்வுகள்

26th Aug 2022 06:11 PM

ADVERTISEMENT


பிரம்மோத்ஸவம்
திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீஅபீஷ்டவரத மஹா கணபதி கோயில் பிரம்மோத்ஸவம் ஆக. 31}ஆம் தேதி தொடங்கி, செப். 11}இல் நிறைவு பெறுகிறது.  உத்ஸவ காலங்களில், சந்தனக் காப்பு அலங்காரம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கும்பாபிஷேகம்
சென்னை நெற்குண்றத்தில் உள்ள வள்ளியம்மை நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஆக. 
29}ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.  
தொடர்புக்கு: 99402 88552.

திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனத்துக்குச் சொந்தமான, மயிலாடுதுறை (தெப்பக்குளம்) ஸ்ரீகாசி விசாலாட்சி அம்பாள் உடனாகிய  ஸ்ரீகாசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் செப். 1}இல் நடைபெறுகிறது.

உழவாரப் பணி
கும்பகோணம் அருகேயுள்ள கடிச்சம்பாடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சென்னை அண்ணாமலையார் அறப்பணிக் குழு சார்பில் உழவாரப் பணி செப். 4}இல் நடைபெறுகிறது. 
தொடர்புக்கு: 94440 28929.

ADVERTISEMENT

ஸ்ரீருக்மிணி கல்யாணம்
சென்னை குரோம்பேட்டை கிருஷ்ணா நகர் ஸ்ரீராம பக்த சமாஜ மண்டப வளாகத்தில் உள்ள பஜனோத்ஸவ 
பந்ததிப்படி ஸ்ரீ ருக்மிணி கல்யாணம், சேரன்மகாதேவி பால வெங்கடகிருஷ்ண குழுவினரால் ஆக. 27,28}ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தி விழா
மேற்கு தாம்பரம் சிடிஓ காலனி லட்சுமிபுரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் கோயிலில், விநாயகர் 
சதுர்த்தி விழா ஆக. 31}இல் நடைபெறுகிறது.

சென்னை சிட்லப்பாக்கம் ஜோதி நகர் ஸ்ரீஆனந்த ஜோதி விநாயகர், ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 31}இல் நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 28}இல் தொடங்கி, செப். 4}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஞான அவ்வை அகவல் சதுர்த்தி விழா
திருப்பூர் அருகேயுள்ள கண்டியன் கோயில் கிராமத்தில் உள்ள திருவடிலோகம் சித்தர் திருவடி பீட வளாகத்தில் அவ்வையார் புகழ் பேசும் விநாயகர் அகவல் பற்றி சொற்பொழிவு, சிறப்புப் பூஜைகள் ஆக. 31}ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 94880 31433.

கும்பாபிஷேக பூர்த்தி விழா
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள 
அருள்மிகு ஸ்ரீபால முனீஸ்வரன் சந்நிதியில் உள்ள 5}ஆம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா செப். 3}இல் நடை
பெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT