வெள்ளிமணி

பயணத்தில் எச்சரிக்கை தேவை இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

5th Aug 2022 03:14 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)


பொருளாதாரம் சிறப்பாக அமையும்.  கடன் வசூலாகும்.  உயர்ந்தோரின் நட்பை மேம்படுத்த சுபநிகழ்ச்சிகள் வாய்ப்பாக அமையும்.  உடல் ஆரோக்கியம், மன வளம் சீராகவே இருக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சாதகமாக அமையும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்கல் லாபமாக இருக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.  அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு நிம்மதி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும்.

ADVERTISEMENT

சந்திராஷ்டமம்- 7,8.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். திட்டமிட்ட காரியங்களைச் சாதுர்யத்துடன் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பு உயரும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் வசூலாகும்.  வியாபாரிகள் புதிய திட்டங்களால் அனுகூலமான முடிவைக் காண்பார்கள்.

விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பம் உண்டாகும்.  கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்கள் அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்-9,10.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும்.  நண்பர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தென்படும்.

வியாபாரிகள் தனித்திறமையை வெளிப்படுத்துவார்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள். பெண்களுக்கு இருந்த நோய்கள் மறையும். மாணவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்பார்கள்.

சந்திராஷ்டமம்-11.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் சுமப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.   உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலை காணப்படும்.

வியாபாரிகள் கடுமையாக உழைத்து எதிர்பார்த்த வருவாயைப் பெறுவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனங்களைத் தாண்டி வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு அந்தஸ்து உயரும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். மாணவர்கள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

சந்திராஷ்டமம்-இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் இருந்த தடை விலகும்.  அலைச்சல் குறையும்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  பயணத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் கெடுபிடி குறையும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் கால்நடை பராமரிப்புக்கும் செலவு செய்ய வேண்டி வரும்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத வருவாய் கிடைக்கும். பெண்கள் கணவரிடத்தில் ஒற்றுமையோடு இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

இதையும் படிக்க: வளமான வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதம்

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் இருந்த தடை விலகும்.  அலைச்சல் குறையும்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  பயணத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் கெடுபிடி குறையும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் கால்நடை பராமரிப்புக்கும் செலவு செய்ய வேண்டி வரும்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத வருவாய் கிடைக்கும். பெண்கள் கணவரிடத்தில் ஒற்றுமையோடு இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பொறுப்புகளை சரிவர  செய்து முடிப்பீர்கள்.  சமுதாயத்தில் பெயர் அந்தஸ்து கூடும்.  உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள்.  உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம்.  

விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடவும்.  அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகளைப் பெறுவார்கள். பெண்களுக்குக் குடும்பத்தில் புதிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்-இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலை புதிய கண்ணோட்டத்துடன் நடத்தத் தொடங்குவீர்கள். சுப காரியங்கள் நடந்தேறும்.  பெற்றோரின் ஆதரவு கூடும் .  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சுலபமாகப் புரிந்துகொண்டு வெற்றி பெறுவார்கள்.

வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகள் பிறருக்கு உதவி செய்வார்கள்.  அரசியல்வாதிகள் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை நிதானத்துடன் செயல்படுத்தவும். பெண்கள் விவேகத்துடன் நடப்பார்கள். மாணவர்கள்  நண்பர்களிடம் கவனமாகப் பழகவும்.

சந்திராஷ்டமம்-இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் நல்ல சூழ்நிலை உண்டாகும். புதிய இலக்குகளை நோக்கிப் பயணிப்பீர்கள். புதியவர்கள் நட்பு மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுப காரியங்கள் நடத்த எண்ணங்கள் மேலோங்கும்.  உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவார்கள்.  

வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வார்கள். விவசாயிகள் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கூடுதல் வருவாயைக் காண்பார்கள்.  கலைத்துறையினர் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள். பெண்கள் தங்களது கடமைகளைஆற்றுவார்கள்.  மாணவர்கள் சகஜமாகப் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம்- இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.  காரியங்களைச் சாதிப்பீர்கள்.  எதிர்ப்புகள் ஏற்படாது.  உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.  வியாபாரிகள் கூட்டாளிகளை கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்கள்.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துக்குச் செலவு செய்ய வேண்டிவரும். அரசியல்வாதிகள் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு வருவாய் குறையும்.  பெண்களுக்கு கணவரிடம் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்- இல்லை.

இதையும் படிக்க: அரங்கேற்ற ஐயனார்!

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்கள் தனித்திறமை வெளிப்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்ப ரகசியங்களைக் காப்பீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்த்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு கௌரவம் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் குறைவாக இருக்கும்.  அரசியல்வாதிகள் உதவிகளைச் செய்து மகிழ்வார்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் உயரிய படிப்புகளில் சேருவார்கள்.

சந்திராஷ்டமம்- இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசு சலுகைகள் கிடைக்கும் உத்தியோகஸ்தர்கள் பணிகளை அக்கறையோடு செய்து முடிப்பார்கள்.  வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்து, வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.  

விவசாயிகள் விழிப்புடன் இருந்து, பயிர்களைக் காப்பாற்றுவார்கள். அரசியல்வாதிகளுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைத் தேடி பெறுவார்கள். பெண்களின் உடல் ஆரோக்கியமும், மன வளமும் மேலோங்கும். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள்.

 சந்திராஷ்டமம்- இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT