வெள்ளிமணி

நிகழ்வுகள்...

29th Apr 2022 04:09 PM

ADVERTISEMENT

105-ஆவது ஆண்டு சங்கர ஜெயந்தி
திருவண்ணாமலை மாவட்டம், மண்டகொளத்தூர் கிராமத்தில் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீராம மந்திரம் ஸ்ரீ சங்கர நிலையத்தில் 105-ஆவது ஆண்டு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மகோத்ஸவம் மே 1 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. மே 6-ஆம் தேதி ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு அன்று காலை மஹன்யாஸ பூர்வக ஏகாதச ருத்ராபிஷேகம், புஷ்பாஞ்சலி, தீபாரதனை, திவ்யநாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: ஸ்ரீ ராமமந்திரம் சங்கரா சாரிடபிள் டிரஸ்ட், ஆனந்த்: 9840155313 மற்றும் சங்கர்  9841856469.
 

மச்சகுபேரர் வழிபாடு
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாம்பேட்டை, மதுரா நவாசிப் பேட்டையில் அருள்மிகு செல்வநாயகி உடனுறை நவநிதீஸ்வரர் ஆலயத்தில் குபேரர் மீன் வாகனத்துடன் சிறப்பாக சந்நிதி கொண்டுள்ளார். மே 3-ஆம் தேதி அட்சயத் திரிதியை முன்னிட்டு மச்ச குபேரருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, வழிபாடு நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: தட்சிணாமூர்த்தி: 7010534389.


சைத்ர உற்சவ ஸ்ரீக்ருஷ்ண யஜீர்வேத பாராயணம்
தஞ்சை மாவட்டம், திருவையாறு திருத்தலத்தில் ஸ்ரீ தர்மாம்பிகா சமேத ஸ்ரீ பஞ்ச நதீஸ்வர ஸ்வாமி கோயில் பிரும்மோற்சவம் மே 5 தொடங்கி மே 17 முடிய நடைபெற உள்ளது. (மே 16 சப்தஸ்தானம் ஏழூர் வலம் வருதல்) உற்சவ காலங்களில், ஸ்ரீகிருஷ்ண யஜீர்வேத க்ரம, ஜடா பாராயணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஆசியுடன் இவ்வாண்டும், காலை முதல் மதியம் வரை சுவாமி சந்நிதியிலும், மாலை வேதபாராயண மாதாஸ்ரீ கிருஹத்திலும், இரவு ஐயாறப்பர் திருக்கோயில் சுவாமி சந்நிதியிலும் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: எம்.அனந்த நாராயணன்: 9443975933.

மகா கும்பாபிஷேகம்
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான குத்தாலம் (மயிலாடுதுறை அருகில்) அருள்மிகு அரும்பன்னவன முலையம்மை ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி (மண வாளநாதர் திருக்கோலத்துடன் அருள்பாலிக்கும்) திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மே 8-ஆம்தேதி காலை 7.30 மணி அளவில் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜை மே 4 ஆரம்பமாகிறது.

ADVERTISEMENT

சாலியமங்கலம் பாகவதமேளா
தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தில்  ஸ்ரீநரஸிம்ம ஜெயந்தி உத்ஸவமும் அதனையொட்டி பாகவத மேள நாட்டிய நாடகங்களும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டு 377-ஆவது ஆண்டு உத்சவம் மே 12 தொடங்கி 16 வரை நடைபெறுகிறது. மே 12 - திவ்யநாம பஜனை, மே 13 - ராதாகல்யாணம் (பாகவத பத்ததிதியில்). மே 14 பிரஹ்லாத சரித்திரம் நாட்டிய நாடகம் மே 15 - ருக்மணி பரிணயம் நாட்டிய நாடகம் இந்த தெய்வீக கலை விழா தொடர்ந்து நடைபெற பக்தர்கள் ஆதரவு கோரப்படுகிறது. 
தொடர்புக்கு: ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம பாகதமேள பக்த சமாஜம்: 9444071220 மற்றும் 9443674366 (தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது இக்கிராமம்). 

ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி  மகோத்ஸவம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம்  அருகில் உள்ள தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீநரஸிம்ம ஜெயந்தி மகோத்ஸவம்.  மே 11-இல் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு  வஸந்த மாலை சாற்றப்பட்டு தொடங்குகிறது. மே.14, காலை, கருடúஸவை,  இரவு - பிரகலாத சரித்திரம் நாட்டிய நாடகம். மே .15 - காலை ருக்மணி கல்யாணம், இரவு  கோணங்கி சேவை, ஆஞ்சநேயர்  உத்ஸவம், மே.16 - திருக்கல்யாண உற்சவம்.  
தொடர்புக்கு: ப்ராசீன ஸ்ம்பரதாய நாட்டிய நாடக மன்றம் டிரஸ்ட் : காசிநாதன் - 9443525514, கல்யாணராமன் - 9443677936

நெல்லூர்பேட்டை தேர்த் திருவிழா
வேலூர் மாவட்டம், நெல்லூர்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு பாலசார்தூலீஸ்வரர் கோயில் (எ) கருப்புலீஸ்வரர் கோயில்  சித்திரைப் பெருவிழா மே 4-ஆம் தேதி தொடங்கியது.  மே 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நாள்கள்:  மே 11- தேர்த் திருவிழா, மே 12 - இரவு புஷ்பப் பல்லக்கு. 

கங்கையம்மன் சிரசுப் பெருவிழா
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் வைகாசிப் பெருவிழா ஏப். 10-இல் பால் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. மே 22-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.  முக்கிய நாள்கள்: மே 11-அம்மன் திருக்கல்யாணம், மே 14- தேர்த் திருவிழா, மே 15- சிரசுப் பெருவிழா, 16- மஞ்சள் நீராட்டு விழா, மே 17-பூப்பல்லக்கு.

ADVERTISEMENT
ADVERTISEMENT