வெள்ளிமணி

விதியில் எழுதப்படாத துன்பங்கள்!

DIN

பணம் சம்பாதிப்பதற்காகப் பொய் பேசுவதும், பொய் சத்தியம் செய்து பொருட்களை விற்பதும் கேடைத் தவிர வேறில்லை. பொருட்களை விற்பனை செய்யும்போது, அப்பொருளின் தரத்திலும், விலையிலும் பொய் கூறுவதானது அந்த வர்க்கத்தையே பாவத்தில் சேர்த்துவிடும். பொய் சொன்னால்தான் விற்க முடியும் என்பது ஒரு முஃமினின் நம்பிக்கையாக இருக்கக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

"பொய்யும், நேர்மையற்ற வாக்குறுதியும் பொருளை விற்பனை செய்ய உதவலாம்.  ஆனால், அது வருமானத்தைக் குறைத்துவிடும்; வளமும் நின்றுவிடும்.
அதுபோல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்?  என்று கேட்டு, தன் பொய்யை நியாயப்படுத்துவது மிகப்பெரிய தவறாகும். ஒரு பக்கம் தேவைகள் நிறைவேற துஆ செய்கிறோம்.  அல்லது கஷ்டங்கள் நீங்க இறைவனிடம் மன்றாடுகிறோம்.  இன்னொரு பக்கம் பொய் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
 இந்நிலையில் பிரார்த்தனை எவ்வாறு நிறைவேறும்?' 
அஸ்மா பின்த் யஜீத் (ரலி) என்ற ஸஹாபா பெண்மணி கூறுகிறார்கள்:
நான் ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், ""எங்கள் பெண்களில் சிலருக்கு ஒரு பொருளின் மீது ஆசை இருந்தும், அப்பொருளின் மீது ஆசை இல்லை என்று கூறினால், அது ஒரு பொய் என்று கருதப்
படுமா?'' என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ""பொய், பொய்யென்றே எழுதப்படும். பெரிய பொய், பெரிய பொய் என்றும்; சிறிய பொய், சிறிய பொய் என்றும் எழுதப்படும்'' என்று பதிலளித்தார்கள்.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு மனிதன் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறான்; நேர்மையில்லாமல் நடந்து கொள்வதைத் தனது வழக்கமாக ஆக்கிக் கொள்கிறான்.  இந்நிலையில், அவனது இதயத்தில் ஒரு கருப்புப் புள்ளி ஏற்படுகிறது.  மெல்ல மெல்ல இதனால் முழு இதயமும் இருண்டு விடுகிறது.   
அவனுடைய பெயர் அல்லாஹ்வின் முன், பொய்யர்களின் பட்டியலில் பதியப்பட்டு விடுகிறது.  "தன் நாவு என்ன பேச்சை வெளிப்படுத்துகிறது?' என்று உற்றுப் பார்க்காதவர்கள் மரண நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
உண்மை என்பது நடந்த நிகழ்வாகும்; பொய் என்பது கற்பனையாகும். கற்பனைக்கு உயிர் கொடுத்து அதை உண்மையாக்க முனைவது முட்டாள்தனமானது.  
பொய் பேசுபவன் விதியில் எழுதப்பட்ட நன்மைகளை இழக்கிறான்; விதியில் எழுதப்படாத துன்பங்களை அடைகிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT