வெள்ளிமணி

திருவடி லோகத்தில் சித்ரா பௌர்ணமி

DIN

 சித்திரகுப்தன் பிறந்த அல்லது உருவான தினமே சித்ரா பெளர்ணமி என்று கருடபுராணம், யம சம்ஹிதா, பத்மபுராணம் விஞ்ஞான தந்திரம் போன்ற புராண நூல்கள் கூறுகின்றன. மனிதர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் உபாயமாக உள்ளவரே சித்திரகுப்தன்.
 இறைவனின் காயம் எனும் உடலில் இருந்து பிறந்ததால் இவர் காயஸ்தா என்றும் அழைக்கப்படுகின்றார், ஆனால் உண்மையில் இவர் இறைவன் குடி கொண்டுள்ள நம் காயத்தில் தான் குடி கொண்டுள்ளார். எனவே இதை நம் கருத்தில் ஊன்றி நாம் செய்யும் பாவங்களை குறைத்து புண்ணிய காரியங்களை அதிகரித்து இறைவன் அருளால் இருவினையும் நீங்கப் பெற்று இறைவனை அடைய முயல வேண்டும்.
 சித்தர்கள் இச்செயலை அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம் என வரை இருக்கின்றனர்.
 "கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
 நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
 வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள் காமம்
 இல்லான் இயமத்திடை நின்றானே'
 எனத் திருமூலர் இறைவனை அடையக் கூடிய ஒரு மெய்யடியார் குணாம்சங்களை வரையறுக்கிறார். எனவே நாம் நம் இயம கணக்கு மீது கவனம் இல்லாமல் செயல்பட்டால் இயமன் வருவது நிச்சயம்.
 நம் திருவடி பீடத்தில் திருவடி லோகத்திற்கு வரும் ஒவ்வொரு மெய்யடியார் இறைவனை அடைய தயார்படுத்திக்கொள்ள கருவறையின் முன்னே உள்ள திருவடி பீடத்திற்கு ஒவ்வொருவரும் தங்கள் திருக்கரங்களால் தாங்களே பூஜை செய்து தங்கள் பாவங்களைப் போக்கும் நிவாரணத்தை எல்லாம் வல்ல இறைவன் அருளால் நம்முள் உணர்ந்து சாப,பாவ நிவர்த்தி பெற்று நல்வழியில் நன்முயற்சியுடன் இறைவனை அடைய திருவடி பீட பூஜையில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
 சித்திரகுப்தன் கேது அதிபதியாக உள்ளார் அந்த கேது நம்முள் எவ்வாறு உள்ளார் என்பதை தத்துவார்த்த விளக்கமாய் அமைந்ததே திருவடி பீடம் மனிதனின் பாவங்களின் மூலகர்த்தா நோய் அந்த நோய் தீர்க்கும் அற்புத மருந்தை சித்தர்கள் கூறிய சித்த வைத்தியம் மூலம் ,திருவடி லோகம் முழுவதும் யாரிடமும் காணிக்கை அல்லது காசு வாங்காமல் நோய்க்கு மருந்து கொடுத்து பெற்ற உபாயத்தால் உருவானதே நம் திருவடி லோகம் முழுவதும். எண்ணிலா அடியார்கள் நோய் தீர்க்க உபாயம் செய்த மருந்துகள் அரைத்த கல்வம் தான் இன்று திருவடி பீடமாக அமைந்துள்ளது. எண்ணிலா அடியார்கள் பாவம் தீர்த்த அந்த திருவடி பீடத்தை வணங்குவதால் நம் பாவம் தீரும் உபாயம் நிச்சயம் நமக்கு கிட்டும்.
 கடந்த 26.04.2021 திங்கள்கிழமை மாலை 3 மணிமுதல் 5 மணி வரை திருவடி லோகத்தில் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று கருவறையின் முன்னே வைத்துள்ள திருவடி பீடத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
 இறைவன் அருளால் நம் பாவங்கள் தீரும் உபாயம் அறிய திருவடி பீடம் வாரீர். திருவடி பீட பூஜையில் பங்கேற்று இறையருள் பெறுவோம்.
 இடம்: திருவடி லோகம், கண்டியங்கோவில், திருப்பூர். தொடர்புக்கு: 90807 55533.
 -உமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT