வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

14th May 2021 06:21 PM

ADVERTISEMENT

* புயல்காற்றில் மேகங்கள் நடுங்குகின்றன. அது போலவே, கெட்ட மனிதர்களின் தோழமை பேரறிவு மறைந்தொழிவதற்கு வழி வகுக்கும். சத்சங்கமோ 
பேரறிவு பூத்துக் குலுங்குவதற்குத் துணை செய்யும்.
- ராமகதா ரசவாகினி
* அறிகிறவன், அறிவு, அறியப்படும் பொருள் என்னும் வேற்றுமைகள் பரமாத்மாவில் கிடையாது. அது ஞான ஆனந்த சொரூபமானதால் தானே பிரகாசிக்கிறது.
-ஆத்மபோதம்
* பழங்கள் நன்றாகக் காய்த்துத் தொங்கும் மரமே கற்களால் அடிபடும். அதுபோல பாவம் செய்தவர்கள் 
தண்டனை பெற்றே தீர்வார்கள். இதிலிருந்து அவர்கள் தப்ப இயலாது.
-பாம்பாட்டிச் சித்தர்
* நல்ல காரியங்களைச் செய்துகொண்டே இரு! 
சோம்பலை விட்டொழி! செய்யும் காரியங்களில் எந்தப் பலனையும் "உனக்காக' என்று எதிர்பார்க்காதே! பலன்களை இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிடு. அப்போது
தான் நீ மனசாந்தியுடன் இருக்க முடியும்.
-மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர்
* நசிகேதன் யமதர்மராஜனிடம் கூறியது:
"சொர்க்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரணதேவனாகிய நீயும் அங்கில்லை. அங்கே யாரும் மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பசி, தாகம் ஆகிய இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்''.
-கட உபநிஷதம், 1.1.12 
ய்மக்களில் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களை உடையவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சத்துவ குணம் உடையவர்களே மேலானவர்கள். உலக மக்கள் சத்துவ குணம் உடையவர்களுடைய சத்சங்கம் என்ற கடலில் ஆழ்ந்திருப்பதே சிறந்தது.
-கம்ப ராமாயணம்
* மூர்க்கன் தன் வீட்டிலும், பிரபு தன் கிராமத்திலும், ராஜா தன் நாட்டிலும், வித்வான் எல்லா இடத்திலும் பூஜிக்கப்படுவார்கள்.
-நீதி சாஸ்திரம்
* இளம்பிறையைச் சிரசில் அணிந்திருக்கும் ஈசன் எனக்குக் கதி; ஹிமவான் புதல்வியான பார்வதி தேவி எனக்குக் கதி; மீண்டும் இந்த இருவருமே எனக்குக் கதி. நான் வேறு எந்தத் தெய்வத்தையும் சரணடைய மாட்டேன்.
-உபமன்யு

ADVERTISEMENT
ADVERTISEMENT