வெள்ளிமணி

பொன்மொழிகள் - தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

வேக வைத்த விதையை நிலத்தில் விதைத்தால் அது முளைக்காது. அதுபோல் பக்தியில்லாதவன் பரமனை அடைய முடியாது.
-இடைக்காட்டுச் சித்தர்

தேவ சேனாபதியே! தாயும் தகப்பனும் தங்களுடைய மக்கள் செய்யும் குற்றங்களைப் பொறுத்து மன்னிப்பார்கள்அல்லவா! நானும் உங்கள் புதல்வன்; நீங்களோ உலகுக்கே தந்தை. பெருமை மிக்க தெய்வமே! என் பிழைகள் எல்லாவற்றையும் பொறுத்து அருள் புரிய வேண்டும்.
-சுப்ரமண்ய புஜங்கம், 30.

நாம் கூடிய வரையில் தர்மம் செய்வது மிகவும் இனியது; நல்ல நெறியில் வாழ்பவர்கள் சொல்லும் பயனுடைய சொல்லின் மாட்சிமை இனியது; எல்லா நலன்களும் வாய்க்கப் பெற்று, நல்லவர்களைப் பாதுகாப்பாகக் கொள்ளுதல் இனியது.
-இனியவை நாற்பது, 6.

நாம் அறிந்தோஅறியாமலோ செய்த எல்லாப் பாவச் செயல்களுக்கும், நிச்சயமாக அழிவை உண்டாக்குவது ஞானம்தான்'' என்று வேதாந்தம் முழங்குகிறது. 
-வேதாந்த முழக்கம் (வேதாந்த டிண்டிம:), 31.

எந்த உயிரினாலும், எந்தப் பிராணியினாலும் நமக்குத் தீங்கு நேராமல் இருக்கட்டும். நாம் எதனிடமும் பயப்படாமல் இருப்போமாக.
-ப்ராணாக்னி உபநிஷதம், 2.

பசியால் வருந்தி வந்தவர்களுக்கு உணவு அளித்து அவர்களின் பசியைப் போக்க வேண்டும். அவ்விதம் செய்பவர்கள் எவரோ, அவர்களே மேலுலகம் செல்லும் வழியை நன்றாக அறிந்தவர்கள்.
-மணிமேகலை

மனதை உலக வியாபார விஷயங்களிலிருந்து இழுத்து, úக்ஷத்திரக்ஞனான பரமாத்மாவுடன் ஐக்கியப் படுத்துபவனே முக்திஅடைகிறான்.
-காசி காண்டம்

உண்மையான சரணாகதி என்றால் என்ன? அது நம் அகங்காரம் தொடர்புடைய செயல்களை நிறுத்தி, இறைவன் அருள் நம்மை நோக்கிச் செல்லும்படி விட்டுவிடுவதாகும்.
-வைணவம்

"இந்த மனித உடல் காரியசித்தியைக் கொடுக்கிறது' என்றாலும் அழிவுடையது. இதை மறந்துவிடாமல் மனதில் இருத்தி, சாவுக்கு முன்பே பிறவித்தளையை  நீக்குவதற்கு அறிவாளி முயற்சி செய்ய வேண்டும்.
-உத்தவகீதை (பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்)

படைத்தவனுடைய ஆணையினால் வினையின் பலன் கொடுக்கப்படுகிறது. வினை என்பது ஜடப்பொருள். ஆதலால் அது பரம்பொருளாகிய மோட்சத்தைக் கொடுக்க இயலாது.
-ஸ்ரீ ரமண மகரிஷி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT