வெள்ளிமணி

செம்பரம்பாக்கம் ஆதிபராசக்தி ஈஸ்வரர் கோயில்

தினமணி

ஏரியால் புகழ்பெற்ற சென்னை செம்பரம்பாக்கம் கிராமத்தில் ஈஸ்வரி உடனுறை ஆதிபராசக்தி ஈஸ்வரர் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சுமார் 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இத்திருக்கோயில் சென்னை - பூவிருந்தவல்லிக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரண்டாம் மாறவர்மன் ஸ்ரீவிக்கிரம பாண்டியனின் 3}ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1253) அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. அதில் "செம்பரம்பாக்கத்து ஆளுடையார் சக்தீஸ்வர மஹாதேவர் இவ்வூரைச் சேர்ந்த விச்சாகரன் அஞ்சேல் என்ற பெருமான் சாயச்சரத்தில் விளக்கெரிக்கவும், தச விளக்கு எரிக்கவும் இரண்டு பசுக்களைக் கொடையாக அளித்தமை' பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்கோயிலில் இறைவன் ஆதிபராசக்தி ஈஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அஷ்ட தாமரை இதழ்களின் மேல் மிகப்பெரிய லிங்க வடிவமாக வீற்றிருக்கிறார். ஆதிபராசக்தி ஈஸ்வரி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். பல ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலை ஊர் பொதுமக்களும், லோகநாதன், ரகு, வீரபத்திர செüத்ரி, ஈ.பாலகிருஷ்ணன் போன்றவர்களும் முன்னின்று, மூல ஸ்தானம், நந்திசிலை போன்றவற்றைப் புனரமைத்து பொதுமக்கள் வழிபாட்டிற்காக தங்களால் முடிந்த இறை பணியைச் செய்துள்ளனர்.  

திருப்பணிகள்: சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து பொதுமக்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கிறார்கள். இந்நிலையில், ஊருக்குள் வரும் பாதையை சீரமைக்கவும், சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இத்திருக்கோயிலின் குளத்தைச் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்திருப்பணிக்கு பக்தர்கள் பொருளுதவி செய்து ஈசன், ஈஸ்வரியின் அருள் பெறலாம். தொடர்புக்கு: லோகநாதன், ரகு - 9941034789 / 9092774704.

- ஆர்.வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT