வெள்ளிமணி

பொன்மொழிகள் - சுவாமி கமலாத்மானந்தர்

22nd Jan 2021 01:05 PM

ADVERTISEMENT

 

ஏ மனமே! பிறப்பு, இறப்பு என்னும் சம்சாரமாகிய கடல் மிகவும் ஆழமானது; கடத்தற்கரியது;  "இதை நான் எப்படிக் கடப்பேன்?' என்று நீ பயப்
படாதே. தாமரைக் கண்ணனும், நரகாசுரனை அழித்தவனுமாகிய பகவானிடம் பக்தி செய்வாயானால், அது ஒன்றே உன்னைப் பிறவிக்கடலைத் தாண்டும்படி செய்துவிடும். 
-ஸ்ரீ முகுந்தமாலா

எல்லாவித பக்தியிலும் சிறந்த பக்தி, இறைவனிடம் ஆத்ம நிவேதனம் அல்லது பூரண சரணாகதி செய்வதாகும்.
-சமர்த்த ராமதாசர் (சத்ரபதி சிவாஜியின் குரு)

உண்மையே சொல், இனிய பேச்சே பேசு, உண்மையாயினும் கொடூரமான சொல்லைச் சொல்லாதே. "காதுக்கு இனிமையாக இருக்க வேண்டும்' என்பதற்காகப் பொய் சொல்லாதே; இதுதான் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் விதித்துள்ள தர்மமாகும். 
-பத்ம புராணம்

ADVERTISEMENT

வேதாந்தத்தின் சாரம் சத்தியம். சத்தியத்தின் சாரம் அடக்கம். அடக்கத்தின் சாரம் மோட்சம். இதுதான் முடிவான தீர்மானமாகும்.
-வியாசர்

கையிலிருந்து கீழே எறியப்பட்டாலும், ஒரு பந்து மீண்டும் மேலேயே எழும்பும். அநேகமாக சான்றோர்களை விபத்து தாழ்த்தினாலும், அவர்கள் அதில் நிற்காமல் மேலே எழும்பிவிடுவார்கள்.
-பர்துருஹரியின் நீதி சதகம்
இறைவனால்தான் எல்லாம் நடைபெறுகின்றன; மனிதனால் ஆவது ஒன்றும் இல்லை. அவர் கடுகிலிருந்து மலையை ஆக்குவார்; மலையைக் கடுகாகவும் 
ஆக்குவார்.
கபீர்தாசர்

சிறிது ஞானத்தால் ஏற்படக்கூடிய புனிதத்தன்மை, எவ்வளவு தவத்தாலும் தீர்த்தத்தாலும் ஜபத்தாலும் தானத்தாலும் மற்ற எவையாலும் ஏற்படாது.
-உத்தவ கீதை

காமக் குரோதங்களை முழுவதும் விட்டுவிட்ட அரசன்; சத்பாத்திரத்தில் தானம் செய்யும் அரசன்; சிறப்புகளை அறிந்திருக்கும் அரசன்;  சாஸ்திரங்களை  கற்றிருக்கும் அரசன்; காரியங்களை விரைந்து செய்யும் அரசன்; அத்தகைய அரசனை எல்லா மனிதர்களும் பின்பற்றி நடக்கிறார்கள்.
-விதுர நீதி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT