வெள்ளிமணி

சொன்னவண்ணம் செய்த பெருமாள்

22nd Jan 2021 01:20 PM | -விவா

ADVERTISEMENT

 

காஞ்சிபுரத்திலுள்ள திருமாலுக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம்: 

திருமழிசையாழ்வார் இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளுக்கு சேவை செய்துகொண்டிருந்தார். அப்போது ஆலயத்தில் திருப்பணிகள் செய்து வந்த ஒரு மூதாட்டியின் நற்செயல்களைக் கண்டு நெகிழ்ந்த திருமழிசையாழ்வார், அம்மூதாட்டியின் தொண்டு நீடிக்க வேண்டும் என்ற விருப்பத்தினால், அவருக்கு இளமையை அருளினார். 

"தொண்டு செய்த மூதாட்டியை திருமழிசையாழ்வார் இளமையாக்கினார்' என்பதை அறிந்த பல்லவ மன்னன் தனக்கும் இளமையை அருளச் செய்யுமாறு ஆழ்வாரின் சீடர் கனிகண்ணனிடம் கேட்டான். அதற்கு அவர் மறுத்தார். இதனால் கோபமுற்ற மன்னன், அந்தச் சீடனை நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்.  இதை அறிந்த ஆழ்வார், "என் சீடனுக்கு இடமில்லாத ஊரில் எனக்கும் இடமில்லை' என்று சொல்லிக் கிளம்பினார். அப்போது ஆழ்வார் பெருமாளை நோக்கி, 

ADVERTISEMENT

"கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்!'

- என்று பாடினார். உடனே பெருமாளும் தன் பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு அவர்களோடு கிளம்பி விட்டாராம். அதனால் இந்தப் பெருமாளுக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு!

பல்லவ மன்னன் தன்னைப் புகழ்ந்து பாடும்படி கனிகண்ணனிடம் கேட்டு, அதற்கு கனிகண்ணன் மறுத்ததால் இச்சம்பவம் நடைபெற்றதாக மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT