வெள்ளிமணி

உறவு ஒற்றுமைக்கு கனுப் பண்டிகை

8th Jan 2021 12:44 PM

ADVERTISEMENT

 

தைப்பொங்கலுக்கு அடுத்த மாட்டுப் பொங்கல் நாளில்தான் "கனுப் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் எழுந்து பெண்கள் தங்களது அண்ணன், தம்பிகள் குடும்ப நலம் வேண்டி "கனுப் பிடி' வைப்பார்கள். 

சூரிய ஒளி படுமிடத்தில் மஞ்சள் இலையைப் பரப்பி அதன்மேல் பொங்கல், கூட்டு, பல வண்ணச் சாதங்கள், கரும்பு, பழங்கள் முதலியவற்றை வைத்து, "தமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்' என்று வேண்டி கனுப் பிடி வைத்து வழிபடுவார்கள். இது ஒரு வகையான திருஷ்டி கழித்தலாகும்.   

"பெண் வாழ - பிறந்தகம் வாழ...'  என்றும், "காக்கா பிடியும்  கனுப்  பிடியும் - கனிவாக நானும் வெச்சேன்...'  என்றும் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள். 

ADVERTISEMENT

அண்ணன் தம்பி நல்வாழ்விற்கு சகோதரிகளும், அக்காள் தங்கை நல்வாழ்விற்கு அண்ணன் தம்பிகளும் வேண்டிக் கொண்டாடும் அருமையான பண்டிகை இது. உறவு ஒற்றுமை வலுப்படவும், சகோதர பாசம் நிலைப்பெறவும் கனுப் பிடியும், பொங்கல் சீரும் உதவுகின்றன. 

உத்தராயண காலத்தை வரவேற்போம்: தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்கள் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சிணாயண காலம் என்றும் வழங்கப்படுகின்றன. மங்களகரமான காரியங்களைச் செய்ய உகந்த காலம் உத்தராயண காலமே! 

தமிழகத்தில் பெரும்பாலான பண்டிகைகள் தட்சிணாயண காலத்தில்தான் நடக்கும். தைப்பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டும் மட்டுமே உத்தராயண காலத்தில் வரும் பெரும் பண்டிகைகளாகும். அதிலும், உத்தராயண காலம் தை மாதம்தான் தொடங்குகிறது. தை முதல்நாளில் உத்தராயண காலத்தை வரவேற்று, "பொங்கல்' திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்! 

-செங்கை பி.அமுதா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT