வெள்ளிமணி

பொன்மொழிகள்: சுவாமி கமலாத்மானந்தர்

8th Jan 2021 12:57 PM

ADVERTISEMENT


நீங்கள் கடமையின் நெறியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு  முயற்சி செய்யுங்கள்.
-பகவான் புத்தர்

ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜபம், தியானம் முதலியவைகளைச் செய்பவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள். அவர்களை ஆன்மவிளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கக் கூடாது.
- வள்ளலார்

நாம் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அறம் ஒன்றுதான் நம்முடன் மறுவுலகிலும் நல்ல நண்பனாகத் தொடர்ந்து வருகிறது; மற்றவை எல்லாம் சரீரத்தோடு நாசமாகிவிடுகின்றன.
-பஞ்சதந்திரம்

வாழ்க்கையில் அடக்கம், பொறுமை, சத்தியம், குருபக்தி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுபிறவி இல்லாமல் இருப்பதற்கு உரிய நல்ல வழி, இந்தப் பிறவியில் இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்வதுதான்.
-மயான யோகியார்

உனக்கு முக்தியில் விருப்பம் இருக்குமானால், 
புலனின்பத்தை விஷம் போன்று வெகு தூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிடு. திருப்தி, இரக்கம், பொறுமை, நேர்மை, மனஅமைதி, புலனடக்கம் ஆகியவற்றை எப்போதும் பரிவுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
-விவேகசூடாமணி

ADVERTISEMENT

சாஸ்திரங்களில் இருக்கும் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்; பெரியோர்களின் கொடுஞ்சொற்கள் நல்வாழ்வை அளிக்கும். அரசனின் கொடிய சொற்களோ போராட்டத்தை வளர்க்கும்.
-கெளடில்யர்

பெருந்தன்மை உடையவர்கள், மிகவும் நல்ல புகழ் படைத்தவர்கள், தர்மத்தில் பற்றுடையவர்கள், நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் ஆகியவர்கள் உலகில் பூஜிக்கத்தக்கவர்கள். உள்ளத்தில் அன்பு பெருக்கற்றவன்  நீரற்ற மேகத்திற்கும், பழமற்ற மரத்திற்கும், பாலற்ற பசுவுக்கும் சமமானவன்.
-ராமாயணம்

நமக்கு மிகவும் பிரியமான விஷ்ணு திருத்தலம் 
திருநாராணபுரத்தில் ஒரு கூரைவீடாகிலும் கட்டிக்கொண்டு அதில் வாசம் செய்யுங்கள். அது முடியாத பட்சத்தில், அர்த்தத்துடன் த்வயமந்திரத்தை ஜபம் செய்தபடியே நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்.
-ஸ்ரீ ராமானுஜர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT