வெள்ளிமணி

பொன்மொழிகள் - கமலாத்மானந்தர்

DIN



ஜீவன் முக்தர்கள் மூன்று வகைப்படுவார்கள். அகண்டாகார ஞானம் பழகும் காலத்தில் "சாதகன்' என்றும், பழகிய பிறகு "திடப் பிரக்ஞன்' என்றும், அதற்கப்பால் விதேகமுக்தி நிலையை அடைந்தவனை "ஆரூடன்' என்றும் கூறுவார்கள்.

ஞானானந்தர்


உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் நலத்தை மட்டும் தேடிக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் உடன் பிறப்பாளர்களுக்கும், உறவினர்களுக்கும் நலன் செய்கிறார்கள். வேற்றுமையின்றி எல்லோருக்கும் நலம் செய்பவர்களே பாராட்டுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

மகான் துளசிதாசர்


முக்தி அடைவதற்கு நான்கு வழிகள் இருக்கின்றன. அவை: 1. ஓயாமல் "ஓம்' என்ற பிரணவ ஜபம் செய்வது, 2. யஜுர் வேதத்தில் இருக்கும் ஸ்ரீ ருத்ர மகாமந்திரத்தை இடைவிடாமல் ஜபம் செய்வது, 3. காசியில் போய் கட்டையாகவாவது வசிப்பது, 4. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை வெட்கத்தை விட்டுஉரக்கச் சொல்வது இவையே முக்தி அடைவதற்கு உரிய நான்கு வழிகளாகும்.


ஒரு சம்ஸ்கிருத சுலோகம்


நாம் பல பிறவிகளையும் தப்பி / கடந்து, மேலானஇந்த மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கம், இறைவனின் திருவருளைப் பெறுவதற்கே ஆகும்.

வடலூர் வள்ளலார்

எவன் தானம் வாங்காமலும், எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், அகங்காரம் இல்லாமலும் இருக்கிறானோஅவன் சகல தீர்த்த யாத்திரையின் பலனைஅடைகிறான்.

இந்து மதம்


ஆபத்தில் தைரியம், நன்மை வரும்போது பொறுமை, சபையில் பேச்சுத் திறமை, போரில் பராக்கிரமம், வேதம் படிப்பதில் உழைப்பு ஆகியவை மகான்களுக்கு இயற்கையாகவே கிடைத்தவையாகும்.

ஹிதோபதேசம்


இறைவனைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை கொண்ட பக்தனுக்கு என்றும் ஆனந்தம் உண்டு. இறைவனை விட்டு விலகி வாழும் வாழ்க்கை உண்மையில் துயரம்தான். மனிதனுடைய குற்றங்கள்தான் அவன் வேதனைக்குக் காரணம். இறைவனுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களை "நம்மைச் சேர்ந்தவர்கள்' என்று ஒரு பக்தன் உறுதியாக நம்புகிறான்.

ஸ்ரீ ராமானுஜர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT