வெள்ளிமணி

பொன்மொழிகள் - சுவாமி கமலாத்மானந்தர்

19th Feb 2021 04:58 PM

ADVERTISEMENT

 

இனிமையான வார்த்தைகளைப் பேசுபவனும், அதன்படியே நடப்பவனும் அழகான மலர் போன்று அனைவராலும் விரும்பப்படுகிறான்.
-பகவான் புத்தர் 

சிறுவர்களையும், சிறுமிகளையும் சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்படி அனுப்பாதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
-மனுநீதி

இந்த மனித உடல் நீர்க்குமிழி போன்று நிலையற்றதாகும். இந்த உலகில் இருக்கும் எந்தப் பொருளின் மீதும் நீ பற்று வைக்காமல் இருப்பதற்கு ஒரு வழி செய்துகொள்.
-கடுவெளிச் சித்தர்

ADVERTISEMENT

இறைவன் எல்லா உலகங்களையும் தன்னுடைய சங்கல்பத்தால் படைக்கிறார், காப்பாற்றுகிறார், அழிக்கிறார். அவர் இந்த என்றும் முடிவு பெறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டை உடையவர். அவரே நம் தலைவர் ஆவார். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம். 
-கம்ப ராமாயணம், கடவுள்வாழ்த்து.

மனிதன் தன்னுடைய பழைய உடைகளைக் களைந்துவிட்டு புதிய உடைகளை அணிந்துகொள்கிறான். அதுபோலவே, ஆத்மா தனது பழைய உடம்புகளை விட்டுவிட்டு, புதிய உடம்புகளை ஏற்றுக்கொள்கிறது.
-பகவத்கீதை 2.22

யாம் உண்மை என்று அறிந்த அறநூல்களில் சொல்லப்பட்ட அறங்களில், உண்மையைக் காட்டிலும் சிறந்ததாகிய அறம் எந்த வகையிலும் வேறு இல்லை.
-திருக்குறள், 300.

நீங்கள் தவறான வழியில் செல்லும் மனதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; அந்த மனதை கிருஷ்ண நாமத்தின் மகிமை கொண்டு, அழியாத தெய்வத்தன்மை பெறச் செய்யுங்கள்.
-ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்

மனிதனே! உனக்கு இந்தப் பிறவி போதாதா? இன்னுமா நீ பிறவித்துன்பத்தில் உழல ஆசைப்படுகிறாய்? மாபெரும் மன்னர்களைப் போல்  சுகபோகங்களை அனுபவித்தவர்களை, செத்தபிறகு எரியூட்டக் கட்டை மீதுதானே கிடத்தி வைப்பார்கள்?
-பட்டினத்தார்

நியாயமான தேவைகளைப் பெற வரும் பொதுமக்களிடம் வற்புறுத்தி அரசு ஊழியர்கள் கைக்கூலி வாங்குகிறார்கள். அவர்களை அந்த நாட்டு அதிபன் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அந்த வஞ்சகப் பித்தர்களின் சொத்து சுதந்திரங்களையெல்லாம் பறிமுதல் செய்து நாட்டைவிட்டே அவர்களை விரட்டிவிட வேண்டும்.
-மனுஸ்மிருதி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT