வெள்ளிமணி

ராகு காலம் நினைவில் வைக்க எளியவழி!

ஆர்.விஜயலட்சுமி

நவகிரகங்களில் ராகுவும்-கேதுவும் நிழல் கிரகங்கள் என்றழைக்கப்படுகின்றன. மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்திற்கு முன்னர் ராகு - கேது இல்லை. வாரத்தின் ஏழு நாள்களும் மற்ற கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ராகு - கேதுவுக்கென ஒரு நாள் ஒதுக்க முடியாததால், ஒவ்வொரு நாளும் அந்த இரு கிரகங்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க சிவபெருமான் உத்தரவிட்டார்.

அந்த வகையில் ராகுவுக்கான நேரம் "ராகு காலம்' என்றும், கேதுவுக்கான நேரம் "எமகண்டம்' என்றும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராகு காலம்

தினமும் ஒன்றரை மணி நேர ராகு காலத்தை நினைவில் வைத்துக் கொள்ள... 

"தி ச வெ பு வி செ ஞா' - என்ற எழுத்துக்களை மனப்பாடம் செய்யலாம்.

ராகு காலம் திங்கள்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவதால் கிழமைகளின் முதல் எழுத்தை மேற்கண்ட வரிசையில் நினைவில் வைத்துக் கொண்டால் காலண்டரைத் தேட வேண்டியதில்லை.

திங்கள்கிழமை:  காலை 7.30 மணி முதல் 9.00 வரை
சனிக்கிழமை:  காலை 09.00 மணி முதல் 10.30 வரை
வெள்ளிக்கிழமை:  காலை 10.30 மணி முதல் 12.00 வரை
புதன்கிழமை: மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
வியாழக்கிழமை:  பிற்பகல் 01.30 மணி முதல் 03.00 வரை
செவ்வாய்க்கிழமை:  பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை
ஞாயிற்றுக்கிழமை: மாலை 04.30 மணி முதல் 06.00 வரை
எமகண்ட நேரம்

குரு பகவானின் புதல்வன் எமன் என்பதால், எமகண்ட நேரத்தை முதலில் வியாழக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும். அப்படியே நாள்களை பின்னோக்கிய வரிசையில் வியாழன், புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளி என நினைவில் வைத்துக் கொண்டால், நேரத்தையும் வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். 

ராகு காலம் மட்டுமே காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. எம கண்டம் காலை 6.00 மணிக்குத் தொடங்குவதால் தினமும் ஒன்றரை மணி நேர எம கண்டத்தை நினைவில் வைத்துக் கொள்ள... 

"வி பு செ தி ஞா ச வெ' 

-என்ற எழுத்துக்களை மனப்பாடம் செய்யலாம். 
வியாழக்கிழமை: காலை 6.00 மணி முதல் 7.30 வரை
புதன்கிழமை: காலை 07.30 மணி முதல் 09.00 வரை
செவ்வாய்க்கிழமை: காலை 09.00 மணி முதல் 10.30 வரை
திங்கள்கிழமை: காலை 10.30 மணி முதல் 12.00 வரை
ஞாயிற்றுக்கிழமை: மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
சனிக்கிழமை: பிற்பகல் 01.30 மணி முதல் 03.00 வரை
வெள்ளிக்கிழமை: பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT