வெள்ளிமணி

ஐந்தாம் வீட்டோனின் பலம்!

3rd Dec 2021 06:00 AM

ADVERTISEMENT

 

1, 5, 9 ஆகிய மூன்று ராசிகளும் திரிகோண ராசிகளாகி, "மஹாலட்சுமி ஸ்தானங்கள்' என்று கூறப்படுகிறது. இதில் ஐந்தாம் வீடு என்பது இரண்டாம் திரிகோண ராசியாகும்.  

இந்த ஐந்தாம் வீடு என்பது பூர்வபுண்ணியம் அல்லது விதி என்று சொல்லப்படுகிற வீடாகும். ஆங்கிலத்தில் "டெஸ்டினி' அல்லது "ஃபேட்' என்பார்களே அதைக் குறிப்பது இந்த ஐந்தாம் வீடாகும்.

இந்த ஐந்தாம் வீடு பலம் பெற்றிருந்தால் குருட்டு அதிர்ஷ்டம் வரும். குழந்தைகளும் நல்ல நிலைக்கு உயர்வார்கள்.  அவர்களின்  அன்பும் ஆதரவும் இறுதிவரை கிடைக்கும். ஐந்தாம் வீடு ஐந்தாம் வீட்டோன் பலம் பெற்று இருந்தால் குருவருளும் திருவருளும் கிடைக்கும். ஞாபக சக்தி சிறப்பாக இருக்கும்.

ADVERTISEMENT

ஐந்தாம் வீடு தெய்வீகத்தையும், தெய்வீக உணர்வையும், மந்திரங்களின் ஞானத்தையும் அளிக்கக்கூடிய இடமாகும். தெய்வ பக்தியையும் இறைவனுடன் உள்ளுணர்வில் பேசுகின்ற திறனையும் கூட வழங்கிவிடும்.

ஐந்தாம் வீடு சிறப்பாக அமைந்து இருக்கும் பட்சத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ்வார். ஐந்தாம் வீட்டின் சுப பலத்தினால் பூர்வீக வழியில் அனுகூலம் நல்ல அறிவுக்கூர்மை, செல்வம், செல்வாக்கு, புத்திர சிறப்பு, மேற்படிப்பில் ஏற்றம், சமுதாயத்தில் பெயர், புகழ் ஆகியவைகள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் சுப கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் குரு, சுக்கிரன்,புதன், சந்திர (வளர்பிறை) பகவான்கள் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், செல்வம் செல்வாக்கு, சமுதாயத்தில் புகழ் ஏற்படுவது மட்டுமில்லாமல் பூர்வீக வழியிலும் ஏற்றம் உயர்வு உண்டாகும். இது அனைத்து லக்னங்களுக்கும் பொருந்தி வருவதையும் காண முடிகிறது.

Tags : vellimanai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT