வெள்ளிமணி

மணியோசை - 20/8/2021

27th Aug 2021 02:45 PM

ADVERTISEMENT

 

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதும் "பொருநை போற்றுதும்' தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். திருநெல்வேலியின் வரலாறு, தாமிரபரணியின் சிறப்பு, விடுதலைப் போரில் வ. உ. சி., சுப்பிரமணிய சிவா இவர்களின் பங்கு... என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பாராட்டுகள்..!
-ந.சண்முகம், திருவண்ணாமலை.

கன்னியாக அம்மன் அருள்பாலிப்பதால் "கன்னியாகுமரி'  என்று ஊர்ப் பெயரும் அமைந்தது. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளில், பகவதி அம்மன் எங்கள் வீட்டுக்கே வந்து அருள் பாலித்தது போல அமைந்தது ஜி.ஏ.பிரபாவின் கட்டுரை. நன்றி..!
-அ.யாழினிபர்வதம், சென்னை - 78. 

"மக்களின் மகிழ்ச்சியே மகாபலியின் மகிழ்ச்சி' என்ற கட்டுரையை ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் சமயத்தில் வெளியிட்டதால் ஏராளமான கருத்துக்களை அறிந்து கொள்ள முடிந்தது. கட்டுரையாளர் அபிராமி மைந்தனை பாராட்டுகிறோம்..!
-மா. கல்பனா பழனி,  தருமபுரி.

இரா.இரகுநாதன் எழுதிய கட்டுரை மூலம் "ஆவணி ஞாயிறு வழிபாடு' நாக தோஷத்தைப் போக்கும் என்ற அரிய தகவலை அறிந்தோம். தோஷமுடையவர்கள் நாக வழிபாட்டுக்குத் தயாராக மிகவும் உதவியது. நன்றி..!
-எஸ்.பானு வெங்கடேஷ், சென்னை-50. 

"வேதமாதா காயத்ரி தேவி' கட்டுரையில், "வேதம் கற்கும் மாணவர்கள் பிரம்மச்சாரியாக இருந்து, தந்தையை குருவாக நினைத்து மந்திரத்தைக் கற்று, பிறருக்கும் கற்பிக்க வேண்டும்' என்ற தகவல் பலரும் அறியாதது. கட்டுரையாளர் எஸ். எஸ். சீதாராமனுக்கு பாராட்டுகள்..! 
-செந்தி. மாரீஸ்வரி, தேனி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT