வெள்ளிமணி

இந்த ராசிக்காரர்கள் குடும்ப ரகசியங்களைப் பகிர வேண்டாம்: வாரப் பலன்கள்

20th Aug 2021 01:10 PM | கே.சி.எஸ். ஐயர்

ADVERTISEMENT

ஆகஸ்ட் 20 முதல் 26ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை  முதல் பாதம் முடிய)


உங்கள் நிதி நிலைமை சற்று கடினமாகும். அனுபவஸ்தர்களிடமிருந்து ஆலோசனை பெற்று தொழிலைத் தொடங்குங்கள். தேவையற்ற விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம். 
உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து நற்பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல புரிதல் உண்டாகும். வியாபாரிகள் தொழில் தொடர்பான பணிகளில் அதிக கவனம் கொள்ளவும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். விவசாயிகளுக்கு கூலித் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தானிய விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.  
அரசியல்வாதிகள் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் எடுத்த காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். ரசிகர்களின் பாராட்டுகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வரும்.  மாணவமணிகள் லட்சியங்கள் நிறைவேறப் பாடுபடுவீர்கள். பெற்றோர்களால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.
பரிகாரம்: ராகு பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 20, 21. 
சந்திராஷ்டமம்: இல்லை.
 

***

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுப்பெற வாய்ப்புள்ளது. எவரையும் நம்பி கடன் கொடுக்காதீர்கள். குடும்பத்தை நேசியுங்கள். உங்கள் கஷ்டங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். 
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு தொடரும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். விவசாயிகள் மகசூல் பெருகி நல்ல லாபம் அடைவீர்கள். சந்தையில் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது பலமுறை யோசித்து, எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் எடுத்த காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். ரசிகர்களின் அன்பையும் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 20, 22. 
சந்திராஷ்டமம்: இல்லை.

ADVERTISEMENT

***
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரையும் உறுதுணையையும் நேசியுங்கள். நண்பர்களை நம்பி மோசம் போகாதீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பொறுமையைக் கையாண்டு பெற்றவர்களையும் பெரியவர்களையும் மதித்து நடக்கவும். 
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மனம் நோகும்படி நடந்து கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளிடம் பகையின்றி இணக்கமாகப் பழகவும். வியாபாரிகளுக்கு பொருளாதார நிலை வலுவடையும். பயணத்தினால் வியாபாரம் விருத்தி அடையும். விவசாயிகள் புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்து பலன் அடைவீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிக்க வேண்டும். 
அரசியல்வாதிகள் அதிக வெற்றிகளைப் பெறப் போகிறீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் நேரத்தைச் செலவிடுவீர்கள். கலைத்துறையினர் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். கிடைக்கும் வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பெண்மணிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களுடன் அறிவுப்பூர்வமான விஷயங்களை விவாதியுங்கள்.
பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 22, 23. 
சந்திராஷ்டமம்: 20, 21.

***
கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

நண்பர்களின் உதவியுடன் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். உற்றார் உறவினர்களின் பொல்லாப்புக்கு ஆளாவீர்கள். மன உறுதி அதிகரிக்க யோகா, பிராணாயாமம் செய்து வரவும். தொழில் மாற்றம் தற்போது அவசியமில்லை. 
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் தொடரும். வியாபாரிகள் வியாபாரத்தைத் திறம்பட நடத்தி, போட்டிகளைச் சமாளிக்கவும். அகலக்கால் வைக்காமல் இருப்பதைக் கொண்டு கடையை நடத்தவும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதித்து நடக்கவும். நாவடக்கம் அவசியம். கலைத்துறையினர் பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகவும். புதிய ஆடை அணிகலன்கள் சேரும். மாணவமணிகள் பெற்றோர் சொல்படி நடந்து கொள்வீர்கள். சக மாணவர்களுடன் அறிவு சார்ந்த விஷயங்களை அலசுங்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 20, 25. 
சந்திராஷ்டமம்: 22, 23, 24.

***
சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

எதிரிகளின் பலம் குறையும். போட்டிகளில் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் கொண்டு சேர்க்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். 
உத்தியோகஸ்தர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றம் உண்டாகும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான பாதை தெரியும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் உதவி கிட்டும். தொழில் அபிவிருத்தி அடையும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். விவசாயிகள் அரசு விவகாரங்களில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கால்நடைகள் மூலம் லாபம் கூடும். 
அரசியல்வாதிகளின் பராக்கிரமம் வெளிப்படும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்
துறையினர் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புதியவர்களின் தொடர்பால் அனுகூலம் ஏற்படும். பெண்மணிகளுக்கு வாழ்க்கை வசதிகள் பெருகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். உடல்நலனில் சற்று கவனம் தேவை. சொத்து சம்பந்தமான சில பிரச்னைகள் ஏற்படும். மாணவமணிகள் புதிய மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பெற்றோர்களின் மனதைப் புண்படுத்தாதீர்கள்.
பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 20, 23. சந்திராஷ்டமம்: 25, 26.

***

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களின் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். சொந்தத் தொழில் விருத்தி அடையும். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடவேண்டாம்.  
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கூடும். நாவடக்கம் நன்மையளிக்கும். உற்சாகமான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு சற்று சறுக்கல் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு பூமி வகையில் ஓரளவு லாபம் உண்டாகும். கடுமையாக உழைத்து மகசூலை பெருக்குவீர்கள். 
அரசியல்வாதிகளுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பண வரவு அதிகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்கள் நிலை உயரப் பாடுபடுவீர்கள். சிறு விபத்துக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. பெண்மணிகளுக்கு தர்ம காரியங்களிலும், தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். மாணவமணிகளுக்கு சுய பலம் அதிகரிக்கும். எதிர்ப்புகளைக் கடந்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 24, 25. 
சந்திராஷ்டமம்: இல்லை.

***

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்கள் பேச்சை அனைவரும் கேட்பார்கள். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். 
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு வருவது சற்று தாமதமாகும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் தொடரும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்த அதிக செலவு செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிரமங்கள் ஏற்படும். விவசாயிகள் போட்டிக்குத் தகுந்தவாறு உழைப்பை கூட்டிக் கொள்ளுங்கள். மகசூல் அதிகமாகி லாபம் பெருகும். 
அரசியல்வாதிகளின் அணுகுமுறையில் சற்று மாற்றம் ஏற்படும். அனைவரிடமும் அன்பு செலுத்தி நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் பெயரும் புகழும் அதிகரிக்கும். சக கலைஞர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான அன்யோன்யம் சுமாராக இருக்கும். விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். மழலையின் வரவு மகிழ்ச்சி தரும். மாணவமணிகளுக்கு படிப்பில் மிகவும் கவனம் தேவை. விளையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.
பரிகாரம்: குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 25, 26. 
சந்திராஷ்டமம்: இல்லை.
***

விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

செய் தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வீடு வாங்குவதற்கான முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். தைரியமாக புதிய முதலீடுகளைச் செய்யலாம். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். 
உத்தியோகஸ்தர்களின் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு உடல் உபாதைகள் உண்டாகலாம். வியாபாரிகள் புதிய யுக்திகளோடு லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். வயல் வரப்பு பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள். 
அரசியல்வாதிகள் நினைத்த காரியங்களைச் சற்று தாமதமாக செய்து முடிப்பீர்கள். மேலிடத்தில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கை தேவை. சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பெண்மணிகள் பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. எவரையும் நம்பி குடும்ப ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மாணவமணிகள் வெளிநாடு சென்று படிக்க எடுக்கும் முயற்சிகள் தீவிரமாகும். 
பரிகாரம்: சிக்கல் சிங்கார வேலனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 20, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

***
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் தோற்றப் பொலிவு கூடும். பணவரவு அதிகரித்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். இயந்திரப் பணி செய்வோர் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது. 
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மறைந்து மனதில் புதுத் தெம்பு ஏற்படும். சுறுசுறுப்புடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் குறையும். முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். விவசாயிகளுக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகும். விளைபொருள்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு கிடைக்கும். 
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். கலைத்துறையினர் மறைமுகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகளுக்கு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நன்கு சிந்தித்து செயல்படவும். மாணவமணிகளுக்கு நண்பர்களின் ஆதரவு நல்ல சூழலை உருவாக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும்.
பரிகாரம்: ராம பக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 24, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

***
மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான பொருள்களை விரும்பி வாங்குவீர்கள். நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்களைச் சந்திப்பீர்கள். அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். 
உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகும். தொழில் முன்னேற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும். விவசாயத்தில் நவீன உத்திகளைப் புகுத்துவீர்கள். 
அரசியல்வாதிகளுக்கு உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவுகளில் இருந்துவந்த இழு
பறிகள் குறையும். கலைத்துறையினருக்கு எண்ணங்கள் மேம்படும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்மணிகளுக்கு கவலைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் சுறுசுறுப்புடன் பாடங்களைப் படித்து முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உடல் நலம் பேண யோகா, பிரணாயாமம் செய்து வரவும்.
பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 25, 26. 
சந்திராஷ்டமம்: இல்லை.

***
கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்க சற்றுத் தாமதமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிக சிந்தனைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எவருக்கும் வாக்கு கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். 
உத்தியோகஸ்தர்களுக்கு பேச்சுத் திறமையும், இனிமையும் அதிகரிக்கும். புதிய நிர்வாகிகளின் அணுகுமுறை உங்கள் கவனத்தை ஈர்க்கும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகுவது நல்லது. விவசாயிகளுக்கு கடன் பிரச்னைகள் தொந்தரவு தராது. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. 
அரசியல்வாதிகளுக்கு செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். உங்கள் திட்டங்கள் சற்று தாமதமாக நிறைவேறும். கலைத்துறையினர் அநாவசியமாக எவரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். புதிய ஒப்பந்தங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். பெண்மணிகளுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த சிக்கல்கள் சற்று குறையும். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். மாணவமணிகள் படிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் ஈடுபடுவது உசிதமல்ல. வெளிநாட்டுத் தகவல் நன்மை தரும். 
பரிகாரம்: ராகு மற்றும் சனி பகவானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 22, 25. 
சந்திராஷ்டமம்: இல்லை.

***

மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய பொருள்களின் சேர்க்கை நிகழும். உடலிலும், மனதிலும் உற்சாகம் ஏற்படும். சில காரியத் தடைகள் இருந்தாலும் அனைத்தும் நல்லபடியாக முடியும். 
உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு செயலையும் நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை. விவசாயிகள் விவசாயத்தில் அமோகமான மகசூலை பெறுவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் அடைவீர்கள். 
அரசியல்வாதிகளுக்கு உங்கள் பொறுமையை சோதிக்கும் நிகழ்வுகள் ஏற்படும். பொறுமையுடன் இருந்து அனைத்தையும் சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் பெருகும். பெண்மணிகளுக்கு கணவன் - மனைவி உறவு மேம்படும். குடும்பத்தில் உங்கள் கெளரவம் உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகளுக்கு முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். பெரியோர்களின் ஆசியுடன் நிதானமாகச் செயல்படுங்கள். 
பரிகாரம்: மகான்களின் தரிசனம் உகந்தது. 
அனுகூலமான தினங்கள்: 23, 26. 
சந்திராஷ்டமம்: இல்லை.

***
 

ADVERTISEMENT
ADVERTISEMENT