வெள்ளிமணி

பொன்மொழிகள்!

9th Apr 2021 03:17 PM

ADVERTISEMENT

 

இறைவனை அறிந்துகொள்ளாத பாவிக்கு அறிவு என்பது ஏது? இறைவனை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், இறைவனை அனுபூதியில் உணர்ந்த  மகான்கள் இயற்றிய சாஸ்திரங்களைப் படிக்க 
வேண்டும். 
-சித்தர் காகபுசுண்டர் 

எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்.
-சமண மதம்

வேதங்கள் காட்டும் வழியைப் பின்பற்றாமல் எவனொருவன் வேறு வழியைப் பின்பற்றுகிறானோ, அவன் கையில் இருக்கிற பாயாசத்தை விட்டுவிட்டுப் புறங்கையை நக்குபவனுக்கு ஒப்பானவன்.
-பிரம்ம கீதை

ADVERTISEMENT

எந்த மனிதர்களின் நல்ல உள்ளத்தில், "மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்' என்னும் எண்ணம் எப்பொழுதும் இருக்கின்றதோ  அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நேரும் ஆபத்துகளும் துன்பங்களும் (தெய்வத்தின் அருளால்) தானாகவே அவர்களை விட்டு விலகி விடுகின்றன. மேலும் அவர்களைத் தேடி செல்வங்களும், இன்பங்களும் எப்பொழுதும் வந்தடைகின்றன. 
-சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத ”லாகம்)

ஆத்மாவைத் தேடுபவர்கள் தவம், பிரம்மச்சரியம், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். அவர்கள் சூரியப் பாதையை அடைகிறார்கள். இந்தப் பாதை ஆற்றல்களின் உறைவிடம், அழிவற்றது, பயமற்றது. இந்தப் பாதையே லட்சியம். இந்தப் பாதை வழியாகச் செல்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆத்மாவைத் தேடாதவர்கள் இந்தப் பாதையை அடைவதில்லை.
-பிரச்ன உபநிஷதம் 1.10 

வஞ்சக எண்ணம் கொண்ட மனம் தெளிவடைந்து, இறைவனைக் காண்பது எந்தக் காலம்? 
-சித்தர் பத்திரகிரியார் 

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.
-பகவான் மகாவீரர், தசவை 69.
நன்மையாயினும் சரி, தீமையாயினும் சரி,  அது விதியினால்தான் ஏற்படுகிறது.
-வேதவியாசர்

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT